உண்மையை மறைத்து சீனா கொரோனாவை பரப்பியது எப்படி..? அம்பலப்படுத்திய பெண் விஞ்ஞானி..!

கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசுக்கு முன்பே தெரியும் என சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 

How did China disseminate Corona in hiding the truth? Exposed female scientist

கொரோனா பாதிப்பு குறித்து சீன அரசுக்கு முன்பே தெரியும் என சீனாவைச் சேர்ந்த ஒரு பெண் விஞ்ஞானி கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவின் வுகான் நகரில் முதன் முதலில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளே திணறி வருகின்றன. கொரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன. How did China disseminate Corona in hiding the truth? Exposed female scientist

இந்நிலையில் கொரோன பற்றிய தகவல்கள் முன்னரே சீன அரசுக்குத் தெரியும் என சீனாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹாங்காங்கில் இருக்கும் வைராலஜி மற்றும் நோய் எதிர்ப்புத்துறையில் நிபுணத்துவம் பெற்ற லி மெங் யான் என்ற பெண் விஞ்ஞானி இது குறித்து கூறுகையில், ’’கடந்த ஆண்டு டிசம்பரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ்  பற்றி சீன அதிகாரிகளுக்குத் தெரியும். கொரோனா தொடர்பாக உலகத்துக்கும் உலக சுகாதார நிறுவனத்துக்கும் உரிய நேரத்தில் தகவல் தெரிவிக்க வேண்டிய கடமை சீனாவுக்கு இருந்தது.How did China disseminate Corona in hiding the truth? Exposed female scientist

அப்போதே வைரஸ் பரவலில் கவனம் செலுத்தியிருந்தால் இன்று பல உயிர்களைக் காப்பாற்றியிருக்கலாம். வைரஸ் தொடர்பாக சீனாவில் ஆராய்ச்சி செய்ய ஹாங்காங் உள்ளிட்ட வெளிநாட்டினருக்கு அனுமதியளிக்க அந்நாட்டு அரசு மறுத்துவிட்டது. உலக சுகாதார அமைப்புடன் இணைந்திருக்கும் தனது சொந்த நிறுவனம், கொரோனா பற்றி மவுனமாக  இருக்குமாறு கேட்டுக் கொண்டதாக டாக்டர் யான் கூறினார்.

அதனை தொடர்ந்து அங்கிருந்து வெளியேற முடிவு செய்து ஏப்ரல் 28-ம் தேதி கேத்தே பசிபிக் விமானம் மூலம் அமெரிக்கா வந்தடைந்தேன். சீன அரசிடம் நான் பிடிபட்டால் மிகவும் மோசமாகச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பேன் அல்லது பிறரைப் போலவே நானும் காணாமல் போயிருப்பேன். கொரோனா தொடர்பான செய்தியை உலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் அமெரிக்கா வந்தேன்’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios