கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில் ,  அதற்கு மருந்து கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  ஆனால் அதற்கு இன்னும் கால தாமதமாகும் என்பதால் தற்போது ஹாங்காங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் வைரஸ் எதிர்கொள்ளும் வகையில் களிம்பு ஒன்றை தயாரித்துள்ளார் .  இதை ஒர் இடத்தில் பூசுவதன் மூலம் அது வைரஸில் இருந்து 90 நாட்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார் இதற்கு MAP-1 எனப் பெயரிடப்பட்டுள்ளது.   வீட்டில் அங்கே கை வைக்கக் கூடாது இங்கே கை வைக்கக் கூடாது என்று மக்கள் அஞ்சிவரும் நிலையில்   தற்போது உலக மக்களை இந்த புதுவகை களிம்பு திரும்பிப் பார்க்க வைத்துள்ளது . கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது .

 

கடந்த 3 மாதத்துக்கு மேலாக உலக நாடுகளை பாடாய்படுத்தி வரும் இந்த வைரஸ்  இதுவரை 2 லட்சத்துக்கும் மேலானவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அமெரிக்கா ரஷ்யா இங்கிலாந்து பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இந்த வைரசில் இருந்து தப்பிக்க முடியாமல் போராடி வருகின்றனர் இந்நிலையில் இந்த வைரஸின் தாக்கம் மேலும் தொடரும் என்றும் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர் ,  இதற்கு ஒரு பிரத்தியேக தடுப்பூசி வந்தால் மட்டுமே இதை கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளனர் .  இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்துவதற்கும் அதிலிருந்து தப்பிப்பதற்கான வழி என்ன என்பது குறித்து உலக அளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வரும் நிலையில் ,  ஹாங்காங் பல்கலைகழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் இந்த வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள களிம்பு ஒன்றைகண்டுபிடித்துள்ளார்

 

,இது வைரஸில் இருந்து தற்காத்துக்கொள்ள வழி தேடும் மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது .  இதுகுறித்து  தெரிவித்துள்ள ஆங்காங் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஜோசப் குவான்  மக்கள் அடிக்கடி  பயன்படுத்தும் அல்லது உபயோகப்படுத்தும்  இடங்களில் இந்த களிம்பை ஸ்பிரே செய்வதன்  மூலம் அந்த இடத்தில் வைரஸ்கள் முற்றிலுமாக அழிக்கப் படுவதுடன் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கப்படுகிறது ,  குறிப்பாக லிப்ட் ,  பொத்தான்கள் போன்ற இடங்களில் பயன்படுத்தலாம்,  ஒரு இடத்தில் இந்த களிம்பை தெளித்தபின் கிருமி நாசினிகளை கொண்ட மில்லியன் கணக்கான நானோ காப்ஸ்யூல்கள் கொண்டுள்ள இந்த மருந்து காய்ந்த பிறகும் பாக்டீரியா வைரஸ் மற்றும் மோசமான கிருமிகளை கொள்வதில் திறம்பட செயல்படும் ,  கிட்டத்தட்ட அது 3 மாதங்கள் வரை செயல்படும் என அவர் தெரிவித்துள்ளார் .

 

இது நச்சுத் தன்மை அற்றதும் பாதுகாப்பானதும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர் .   ப்ளீச் மற்றும் ஆல்கஹால் போன்ற பொதுவான கிருமி நாசினிகளை போலல்லாமல் இது  உலர்ந்த பின்னும்  அதிக வெப்பநிலையிலும்  கிருமிகளைக் கொல்லும் ஆற்றல் வாய்ந்ததாக உள்ளது . இது பொது இடங்களில்  பள்ளிகூடங்கள்,   ஷாப்பிங் மால்கள்,  விளையாட்டு பயிற்சி கூடங்கள் ,  போன்றவற்றில் அதிக அளவில் பயன்படுத்தலாம் ,  உள்ளூர் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் இந்த நச்சுத் தன்மையற்ற பூச்சை  ஏற்கனவே நகரத்தின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வீடுகளில் தெளிக்கப்பட்டுள்ளது .  இதன்மூலம் வைரசிலிருந்து தாங்கள் பாதுகாக்கப்பட்டதாக உணர்கிறோம் என இந்த களிம்பு தோளிக்கப்பட்ட  ஹாங்காங் குடிசை வாழ்மக்கள் தெரிவிக்கின்றனர் .  இது பிப்ரவரி மாதத்தில் அதிகாரப்பூர்வமாக  வெகுஜன மக்கள் மத்தியில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் அடுத்த மாதம் ஆங்காங் கடைகளில் இது விற்பனைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .