இந்துக்களும், சீக்கியர்களும்கூட மீண்டும் ஆப்கன் வந்து வாழலாம்... தலிபான்கள் தலைவர் வரவேற்பு..!

ஆப்கனை ரஷ்யர்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன் எனது இளமை பருவத்தில் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்றேன். தற்போது அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.
 

Hindus and Sikhs can come and live in Afghanistan again ... Welcome to the Taliban leader

கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கனிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற இந்துக்களும், சீக்கியர்களும் கூட மீண்டும் ஆப்கன் வந்து வாழலாம் என ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய நிலையில், தலிபான் ஆட்சியின் வெளியுறவு அமைச்சராக ஷெர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர், இந்திய ராணுவ அகாடமியின் பழைய மாணவர். இந்நிலையில், தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், ‘’உலக நாடுகள் அனைத்துடனும் நாங்கள் நட்புறவு பாராட்டவே விரும்புகிறோம். 20 ஆண்டுகள் அமெரிக்கப் படைகள் இங்கு இருந்தன, இப்போது படைகளை விலக்கிக் கொண்டனர்.

Hindus and Sikhs can come and live in Afghanistan again ... Welcome to the Taliban leader

அமெரிக்காவுடன் நட்புறவுடன் தான் இருந்தோம். அவர்கள் மீண்டும் வந்து ஆப்கன் புனரமைப்பு திட்டத்தில் பங்கு பெற வேண்டும். அமெரிக்காவுடன் பண்பாட்டு, பொருளாதார நட்புறவு பேண விரும்புகிறோம். இந்தியா மட்டுமல்ல, தஜிகிஸ்தான், ஈரான், பாகிஸ்தான் என்று அனைத்து நாடுகளுடனும் நட்புறவே பேணுவோம். ஆப்கனை ரஷ்யர்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு முன் எனது இளமை பருவத்தில் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி பெற்றேன். தற்போது அவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை.Hindus and Sikhs can come and live in Afghanistan again ... Welcome to the Taliban leader

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்துக்களும், சீக்கியர்களும் வெளியேற வேண்டிய அவசியமில்லை. அவர்கள் இங்கு அமைதியாக வாழலாம், அவர்களுக்கு தீங்கு இல்லை. கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கனிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற இந்துக்களும், சீக்கியர்களும் கூட மீண்டும் ஆப்கன் வந்து வாழலாம். எங்களின் புதிய ஆட்சியை அனைத்து நாடுகளும் ஆதரிக்கும். யாரும் பயப்பட வேண்டிய அவசியமில்லை’’ என அவர் கூறினார்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios