PM Modi : இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே அரசு ரீதியிலான மோதல்கள் கடந்த சில ஆண்டுகளாகவே நடந்து வருகிறது.

இதன் உச்சகட்ட மோதல் கடந்த செப்டம்பர் மாதம் வெடித்தது. இதன் தொடர்ச்சியாக இந்து கோவில் மீது கனடாவில் தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது அதிர்ச்சியை அளித்துள்ளது. கனடாவின் பிராம்ப்டனில் உள்ள இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட ஒரு நாள் கழித்து, இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவுகளில் பதற்றம் நீடித்து வருகிறது. காலிஸ்தான் தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலை இந்தியா கடுமையாக கண்டித்துள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை, தீபாவளி கொண்டாட்டங்களின் போது, கனடாவில் உள்ள இந்து சபா கோயிலுடன் இணைந்து அத்தியாவசிய சேவைகளை இந்துக்கள் வழங்கிக் கொண்டு இருந்தனர். அப்போது, தடை செய்யப்பட்ட காலிஸ்தான் அமைப்பான சீக்கியர் ஃபார் ஜஸ்டிஸ் ஆதரவாளர்கள் இந்திய அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் தாக்குதல் நடந்தது. இந்து சபா கோவிலை சுற்றியுள்ள மைதானத்தில் மோதல் வெடித்தது தொடர்பான ஒரு வீடியோ வெளியாகி இருந்தது. இருதரப்பினர் ஒருவரையொருவர் கம்புகளால் தாக்கிக் கொள்வது போன்ற வீடியோவும் வெளியாகி இருந்தது. இதை கண்டித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். 

மகளிர் உதவித்தொகை 2500 ரூபாய்.! முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தனது அறிக்கையில், ''கனடா அரசாங்கம் அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் இதுபோன்ற தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்'' என்று ஜெய்ஸ்வால் கேட்டுக் கொண்டு இருந்தார். 

இந்து கோயில் மீதான தாக்குதலுக்குப் பிறகு கனடா காவல்துறை 3 பேரைக் கைது செய்தது. இதற்கிடையில், பிராம்ப்டனில் உள்ள இந்து கோயில் மீதான தாக்குதலுடன் தொடர்புடைய மூன்று நபர்களைக் கைது செய்ததாக பீல் பிராந்திய காவல்துறை அறிவித்தது. இருப்பினும் அவர்களின் அடையாளங்களை வெளியிடப்படவில்லை. 

இதற்கிடையில், கனடப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் இந்தத் தாக்குதலைக் கண்டித்து, ''காலிஸ்தானி தீவிரவாதிகள் என்று குற்றம்சாட்டி, ஒவ்வொரு கனடா நாட்டு மக்களும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உண்டு என்று தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்து இருந்தார். 

Scroll to load tweet…

இந்த நிலையில் தான் இந்த தாக்குதலுக்கு முதன் முறையாக பிரதமர் மோடி தனது கண்டனத்தை கடுமையாக பதிவு செய்து இருக்கிறார். பிரதமர் தனது எக்ஸ் தளத்தின் பதிவில், ''கனடாவில் இந்து கோவில் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். அதேபோன்று நமது ராஜதந்திரிகளை மிரட்டும் கோழைத்தனமான முயற்சிகளும் ஏற்றுக் கொள்ள முடியாது. இத்தகைய வன்முறைச் செயல்கள் இந்தியாவின் உறுதியை ஒருபோதும் பலவீனப்படுத்தாது. கனடா அரசு நீதியை உறுதிப்படுத்தி சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என எதிர்பார்க்கிறோம்'' என்று குறிப்பிட்டுளார்.

உ.பி.யை எரிசக்தி துறையில் தன்னிறைவு அடைய செய்யும் முயற்சியில் யோகி அரசு!