MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • மகளிர் உதவித்தொகை 2500 ரூபாய்.! முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

மகளிர் உதவித்தொகை 2500 ரூபாய்.! முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை 1000 ரூபாய் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்த திட்டத்தை விரிவுபடுத்த கோரிக்கை எழுந்துள்ளது. இது தொடர்பாக முதலமைச்சர் விரைவில் அறிவிப்பு வெளியிடவுள்ளார். 

2 Min read
Author : Ajmal Khan
Published : Nov 04 2024, 07:31 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

தமிழக அரசின் பெண்களுக்கான திட்டங்கள்

தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்கள் தங்களது சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்பதற்காகவும், யாரையும் எதிர்பார்க்காமல் சுய தொழில் செய்து வாழ வேண்டும் என்பதற்காவும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.

அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு உயர்கல்வியின் போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சுய தொழில் செய்ய இரண்டு லட்சம் ரூபாய் வரை மானியத்தில் கடன் உதவி வழங்கப்படுகிறது. மேலும் திருமண உதவி திட்டம். கர்ப்பிணி பெண்களுக்கு நிதி உதவி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

மகளிர் உரிமை தொகை திட்டம்

இந்த நிலையில் தான் பெண்களுக்கு மாதம், மாதம் அடிப்படை தேவைகளுக்காக யாரையும் எதிர்பார்க்காமல் வாழும் வகையில் திமுக அரசால் மகளிர் உரிமை தொகை திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் பெண்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

இந்த திட்டத்தில் தற்போது வரை ஒரு கோடியே 15 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை எழுந்துள்ளது. அந்த வகையில் இந்த திட்டத்தில் விதிக்கப்பட்ட விதிமுறைகள் தளர்த்த வேண்டும்,

35
magalir urimai thogai

magalir urimai thogai

விரிவாக்கம் செய்யப்படுமா.?

ஆயிரம் ரூபாய் வழங்குவதை 2000 ரூபாயாக அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்துப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே உள்ள நிலையில் மகளிர் உரிமை தொகை தொடர்பாக சூப்பரான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் கூறப்படுகிறது. 

தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள மகளிர் உரிமை தொகை திட்டம் போல் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் 2000 ரூபாய் வரை மகளிர் உதவி தொகை வழங்கப்பட்டு வருகிறது.

45

பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவி தொகை

இந்தநிலையில் தற்போது சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள ஜார்கண்ட் மாநிலத்திலும் மகளிர் உதவி தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவம்பர் 13 மற்றும் நவம்பர் 20ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து  தற்போதைய முதல்வர் ஹேமந்த் சோரன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அதன் படி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ், பெண் பயனாளிகளுக்கு மாதம் ரூ 2,500 நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார். 

55

இலவச சிலிண்டர்

மேலும்  ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியத்துக்குப் பதிலாக 7 கிலோ உணவு தானியம் வழங்கப்படும். ஓய்வூதியத் தொகையும் உயர்த்தி வழங்கப்படும். அங்கன்வாடி மையங்களில் குழந்தைகளுக்கு மதிய உணவில் பழங்கள் மற்றும் முட்டைகளும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதற்கு போட்டியாக பாஜகவும் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதன் படி ஜார்க்கண்ட்டில் தங்கள் கட்சி ஆட்சி அமைத்தால் மகளிருக்கு மாதம் 2 ஆயிரத்து 100 ரூபாய் அளிக்கப்படும் அறிவித்துள்ளது. மேலும் வருடத்திற்கு  இரண்டு சிலிண்டர்கள் இலவசமாக அளிக்கப்படும், சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும் என கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தேர்தல்
அரசியல்
தமிழ்நாடு
பெண்கள்
மகளிர் உரிமைத் தொகை
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329 & 387
AUSAUS
429
Day 4
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Governance : விவாதத்திற்கு பதில் கூச்சல் : இளைஞர்களுக்கு புதிய இந்தியா தரும் பாடம்!
Recommended image2
FASTag Annual Pass: இனி வெறும் ரூ.1500 தான்..! 1ம் தேதி முதல் புதிய விதி.. யாருக்கெல்லாம் தெரியுமா?
Recommended image3
வெறும் ரூ.200 கூப்பனுக்கு ரூ.50 லட்சம் ஃபார்ச்சூனர் கார் பரிசு... 6 வயது பேரனுக்காக பாட்டி அடித்த ஜாக்பாட்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved