அமெரிக்கா - கனடா எல்லையில் தடுப்புச் சுவரில் மோதி வெடித்து சிதறிய கார்; இருவர் பலி; தீவிரவாத செயலா?
அமெரிக்கா - கனடா எல்லையில் அமைந்திருக்கும் சோதனைச் சாவடியில் வேகமாகச் சென்ற கார் ஒன்று திடீரென தடுப்புச் சுவரில் மோதி வெடித்தது. இதில் இருவர் கொல்லப்பட்டனர். இதையடுத்து இருநாடுகளுக்கும் இடையிலான எல்லை மூடப்பட்டது.
அமெரிக்கா - கனடா எல்லையில் நயாகரா நீர்வீழ்ச்சி அருகே நியூயார்க் மாநிலத்தையும் ஆன்டாரியோவையும் இணைக்கும் ரெயின்போ பாலத்தின் தடுப்புச் சுவரில் கார் ஒன்று மோதி வெடித்தது. இதில் கார் முற்றிலும் எரிந்தது. இந்தக் கார் அமெரிக்காவில் இருந்து சென்று கொண்டிருந்தது. பலத்த வெடிச் சத்தம் கேட்டதாகவும், சோதனைச் சாவடி அருகே பெரிய புகைமூட்டம் காணப்பட்டதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர். அங்கு பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி காட்சிகளிலும் இந்த விபத்து பதிவாகி இருக்கிறது. இருநாடுகளுக்கும் எல்லை என்பதால், அங்கு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு இருக்கிறது.
இந்த விபத்து குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல், ''நியூயார்க் நகரின் வடமேற்கே சோதனைச் சாவடியில் நடந்த குண்டுவெடிப்பில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இது தீவிரவாத தாக்குதலாக தெரியவில்லை. அதற்கான எந்த ஆதாரமும் தற்போது கிடைக்கவில்லை. இது ஒரு பயங்கரமான சம்பவம், ஒரு விபத்து'' என்று தெரிவித்துள்ளார்.
நயாகரா நீர்வீழ்ச்சிக்கு அருகில் உள்ள பெரிய ரெயின்போ பாலம் கிராசிங்கில் கார் வெடித்துள்ளது. கார் எஞ்சின் தவிர அனைத்து பாகங்களும் எரிந்துவிட்டன. இரண்டு பக்கங்களிலும் இருக்கும் அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு சம்பவ இடத்தில் தேவையான அவசர வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கார் அதிவேகத்தில் வருவதும், விமானம் போல பறந்து சென்று விபத்துக்குள்ளாவதும் சிசிடிவியில் பதிவாகி இருக்கிறது.
சீனாவில் நிமோனியா பரவல் பீதி.. நிரம்பி வழியும் மருத்துவமனைகள்.. WHO வெளியிட்ட முக்கிய தகவல்..
அதிவேகமாக வந்து கொண்டிருந்த கார் வெடித்து, தீப்பற்றி எறிந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேசமயம், இது மிகவும் மோசமான சம்பவம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். தீவிரவாதிகளின் சதிவேலையாக இருக்கலாமா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆத்தி.. 6 மில்லியன் உடல்கள் புதைக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கல்லறை.. இவ்வளவு பெரிய இடமா?