எலிசபெத்தின் இறுதிச்சடங்கில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்… யாராக இருந்தாலும் பஸ்ஸில் தான் வர வேண்டுமா?

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்வில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் பங்கேற்க, வரும் உலக தலைவர்கள் அனைவரும் பேருந்தில் தான் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

high security in funeral event of queen elizabeth and world leaders have to come by bus

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நிகழ்வில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதில் பங்கேற்க, வரும் உலக தலைவர்கள் அனைவரும் பேருந்தில் தான் வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. லண்டனில் உள்ள மேஃபேரில் கடந்த 1926 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 இல் பிறந்தார் எலிசபெத் மகாராணி. பிரிட்டன் வரலாற்றில் அதிக காலம் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், உடல்நலக்குறைவால் கடந்த 8 ஆம் தேதி காலமானார். பால்மோர இல்லத்தில் அவர் உயிர் பிரிந்தது. இதை அடுத்து இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இறுதிச்சடங்கு நிகழ்வில் வெளிநாடுகளின் தலைவர்கள் முக்கிய பிரதிநிதிகள் என 500க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள உஸ்பெஸ்கிஸ்தான் செல்கிறார் பிரதமர் மோடி!!

இவர்களில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அடங்குவார். உலகின் மிக முக்கிய தலைவர்கள் பங்கேற்க இருப்பதால் இறுதிச்சடங்கு நடைபெறும் வெஸ்ட் மினிஸ்டர் அபே பகுதியில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இங்கிலாந்தில் ஆறு தசாப்தங்களுக்குப் பிறகு நடைபெறும் முதல் அரசு இறுதிச்சடங்கு இது என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இறுதிச்சடங்கில் பங்கேற்க வரும் உலக நாடுகளின் தலைவர்கள் யாரும் சொந்த வாகனங்களில் பயணிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இதையும் படிங்க: நடுவானில் விமானத்தில் கோளாறு.. அந்த திகில் நிமிடங்கள் - தப்பித்த முன்னாள் பிரதமர் இம்ரான் கான்

வெஸ்ட்மின்ஸ்டர் அப்பே அல்லது லண்டலின் பயணிக்கும் போது ஹெலிகாப்டர்களை பயன்படுத்தக்கூடாது என்றும் மேற்கு லண்டனில் இருந்து அப்பே நகருக்கு தனியார் பேருந்துகள் மூலம் அழைத்து செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக இறுதிச்சடங்கு நிகழ்வில் பங்கேற்க இருக்கும் தலைவர்களின் நாட்டு தூதரகங்களுக்கு புரோட்டாகால் தகவல் அனுப்பட்டுவிட்டதாக அதிகரிகள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் ராணியின் உடல் வைக்கப்பட்டு இருக்கும் சவப்பெட்டி பாராளுமன்றத்தில் வைக்கப்படும் போது இறுதி அஞ்சலி செலுத்தும் உலக தலைவர்கள் 3 நிமிடங்கள் இரங்கல் உரையும் நிகழ்த்த அனுமதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios