ஜப்பானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 100 கும் அதிகமானோர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது  

ஜப்பானில் உள்ள ஹிரோஷிமா, கியாட்டோ, ஒக்காயாமா, எஹிமே உள்ளிட்ட மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.

மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கார்கள், பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கின்றன.

தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்ததால், மீட்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டு உள்ளது. அவர்கள் ராணுவ படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டு மேடான பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில் மழை வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காணாமல் போன 50-க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகளில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு வருகின்றனர். நிலசரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி  உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.