அடுத்த இரு வாரங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்! மழைக்கு வாய்ப்பு குறைவு - சிங்ப்பூர் வானிலை மையம் தகவல்!
சிங்கப்பூரில் இந்த மாத இறுதி வரை வரண்ட வானிலை தொடரும் என்றும், மழை பெய்ய வாய்ப்பு இல்லை என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாத முதல் பாதியின் தொடர்ச்சியாக, வறட்சியான பருவநிலை இரண்டாம் பாதியிலும் தொடரும் என சிங்கப்பூர் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஒருசில நாட்களில் வெப்பநிலை அதிகபட்சமாக 35 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என்றும், மழை பெய்யும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என சிங்கப்பூர் வானிலை ஆய்வு நிலையம் அறிவித்துள்ளது. .
குறிப்பிட்ட சில நாட்களில், தீவின் பல்வேறு பகுதிகளில் காலை மற்றும் பிற்பகல் வேளைகளில் சிறிது நேரம் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் மாதம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் சராசரியைவிடக் குறைவான மழைபொழிவு இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் நிதிநிலைமை!- நாட்டு மக்கள் அடிப்படை விசயங்களை தெந்துகொள்வது அவசியம்! பிரதமர் லீ செயன் விளக்கம்!
இம்மாதத்தின் அடுத்த இரு வாரங்களில் பெரும்பாலான நாட்கள் அதிக வெப்பமாக இருக்கும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி முதல் 34 டிகிரி செல்சியசாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், சில நாட்களில் இரவு நேரங்களிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்றும், அந்நாட்களில், குறிப்பாக சிங்ப்பூரின், தென்கிழக்கு வட்டாரங்களில் வெப்பநிலை சுமார் 28 டிகிரி செல்சியசாக இருக்குமென எதிர்பார்க்கப்படுவதாக சிங்கப்பூர் வானிலை மையம் தெரிவித்துள்ளது.