வேலையில் சேர இரவு முழுவதும் 32 கி.மீ. தூரம் நடந்து வந்த இளைஞர்...காரை பரிசளித்த நிறுவனத்தின் செயல் அதிகாரி!
தனியார் நிறுவனம் ஒன்றில் வேலையில் சேர்வதற்காக 32 கிலோ மீட்டார் தூரம் நடந்து சென்ற இளைஞருக்கு, அந்த நிறுவனத்தின் செயல் அதிகாரி தனது காரை பரிசளித்துள்ளார்.
அமெரிக்காவின் அலபாமாவை சேர்ந்த வால்டர் கார் என்ற இளைஞருக்கு, பெல்ஹூப்ஸ் மூவிங் என்ற நிறுனத்தில் வேலை கிடைத்துள்ளது. பணியில் சேர்வதற்காக, முந்தைய நாள் இரவு, வால்டர் தயாராகிக் கொண்டிருந்த போது, அவருடைய கார் பழுதடைந்துள்ளது. காரை சரி செய்ய அவரிடம் பணம் இல்லாததால், காலையில் விரைவாக அலுவலகத்திற்கு செல்ல முடிவெடுத்த வால்டர், இரவே நடக்கத் தொடங்கினார்.
வீட்டிற்கும் அலுவலகத்திற்கும் சுமார் 32 கிலோ மீட்டர் தூரம் உள்ள நிலையில், ஊர் இரவு முழுவதும் தூரத்தை ஓர் இரவில் கடந்தார். அப்போது, அந்த வழியாக வந்த போலீசார், அந்த இளைஞரிடம் விசாரணை நடத்த, அவர் தான் நடந்து வந்தக் கதையைக் கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரை ஜெனிஃபர் என்பவரது வீட்டுக்கு அழைத்து சென்றனர்.
அங்கு சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு, வால்டர் தனது அலுவலகத்திற்கு கிளம்பிச் சென்றார். வால்டர் நடந்து வந்த கதையைக் கேட்டிருந்த ஜெனிஃபர், அதைப்பற்றி தனது ஃபேஸ்புக் முகநூல் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டார். அவருடைய பதிவு, வலைதளங்களில் வைரலானது. அந்தப் பதிவை, அந்த இளைஞர் வேலைக்கு சேரவிருக்கும் பெல்ஹூப்ஸ் மூவிங் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியும் பார்த்துள்ளார்.
உடனே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, அந்த இளைஞருக்கு தன்னுடைய காரை பரிசாக அளித்தார். குறித்த நேரத்தில் அலுவலகம் செல்ல வேண்டும் என்ற இளைஞரின் எண்ணத்திற்கு பல்வேறு தரப்பினர் மத்தியில் பாராட்டுக்குகள் குவிந்து வருகிறது.