அமெரிக்காவில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் தனியார் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மத்திய பசிபிக் பெருங்கடல் பகுதியில் அமெரிக்காவின் ஹவாய் மாநிலம் அமைந்துள்ளது. தீயை கக்கும் எரிமலைகள் மற்றும் ஏராளமான தீவு கூட்டங்களை உள்ளடக்கிய ஹவாய் மாநிலத்தின் மிகப்பெரிய நகரமாக ஓவாஹு விளங்கி வருகிறது. 

இந்நிலையில், ஓவாஹுவின் தலைநகரான ஹோனோலுலுவில் உள்ள டில்லிங்ஹாம் விமானத்தளம் அருகே பறந்துக் கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான இரட்டை என்ஜின் விமானம் திடீரென்று கீழே விழுந்து நொறுங்கி தீப்பற்றி எரிந்து சாம்பலானது. 

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 11 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அந்த விமானத்தில் இருந்த அனைவரும் ‘ஸ்கை டைவிங்’ சாகசத்தில் ஈடுபடும் முயற்சியில் சென்றதாக தெரிகிறது.