இறந்த தாய் டயனாவுக்காக இருக்கை ஒதுக்கிய இளவரசர் ஹாரி..! உலகமே நெகிழ்ந்த சம்பவம்...!
இந்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் திருமணம் நேற்று லண்டனில் வெகு விமரிசையாக நடைபெற்றது
பிரிட்டன் ராஜக் குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் ஹாரி மற்றும் அமெரிக்க நடிகை மேகன் மார்க்கல் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இதையடுத்து, இவர்களின் திருமணம் சனிக்கிழமை காலை, இங்கிலாந்தில் உள்ள விண்ட்சார் கோட்டை அருகே இருக்கும் செயின்ட் ஜார்ஜ் சேப்பல் தேவாலயத்தில் மிகவும் விமர்சியாக நடைபெற்றது.
இந்த திருமணத்தில் அரச குடும்பங்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள முக்கியமான நபர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
மேலும் இளவரசர் திருமணத்தை பார்க்க உலகம் முழுவதும் உள்ள லட்சகணக்கான மக்கள் கூடி இருந்தனர்
திருமணத்தின் போது, மிக முக்கிய நபர்கள் அமர்ந்து இருந்த இருக்கை வரிசையில் முதல் சேர் காலியாக இருந்தது.
மற்ற இருக்கைகள் முழுவதும் நிரம்பி இருந்தது.
பின்னர் தான் தெரிய வந்தது, அந்த இருக்கை மறைந்த தனது தாய் டையானவுக்காக ஒதுக்கி வைத்துள்ளார் இளவரசர் ஹாரி.
இந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்தது.