ஈஃபிள் டவரின் கீழ் குத்தாட்டம் போட்ட பாப் பாடகி அதிரடி கைது!
பாரிஸின் முக்கிய சுற்றுலாத்தலமான ஈஃபிள் டவரின் கீழ் அனுமதியின்றி நடனமாடிய பாப் பாடகி மற்றும் கிரே நிக்கோல் மற்றும் அவரது தோழி இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாப் பாடகி கிரே நிக்கோல், இவர் தனது தோழியுடன் பிரான்சிற்கு சுற்றுலா சென்றுள்ளார். உலகப் புகழ் பெற்ற ஈஃபிள் கோபுரத்திற்கு சென்ற அவர்கள் சந்தோசத்தில் சாலையின் நடுவே குத்தாட்டம் போட்டுள்ளனர்.
இரு புறங்களிலும் வாகனங்கள் சென்றுகொண்டிருந்த நிலையில் அவர்கள் நடனமாடிக் கொண்டிருந்தனர். இந்தக்காட்சியை கிரே நிக்கோல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அப்பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.
இது தொடர்பாக காவல்துறை தரப்பில், கிரே நிக்கோல் மற்றும் அவரின் தோழி ஆகிய இருவரும் சாலையின் நடுவே அனுமதியின்றி நடனமாடி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்தால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் சிலர் இவர்களை கடுமையாக விமர்சித்துள்ளனர். இவர்களது ஆட்டத்தை கண்டு ரசித்த சிலர் ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.