ஜெர்மனியில் ஏற்பட்ட அதிரடி திருப்புமுனை ..!! கட்டுப்பாட்டுக்குள் வந்தது கொரோனா..!!
இந்நிலையில் அமெரிக்காவுக்கு அடுத்து இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன
ஜெர்மனியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று வெகுவாக குறைந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார ஆலோசனை குழு தெரிவித்துள்ளது . கடந்த வாரம் 700 முதல் 1600 வரை இருந்து வந்த நோய் தொற்று எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் வெறும் 685 ஆக குறைந்துள்ளது என அந்நாடு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது இதுவரை உலக அளவில் 36 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2.52 லட்சமாக உயர்ந்துள்ளது , எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு வைரஸால் அமெரிக்காவே மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இந்நிலையில் அமெரிக்காவுக்கு அடுத்து இத்தாலி ஸ்பெயின் பிரான்ஸ் ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன , இந்நிலையில் மற்ற ஐரோப்பிய நாடுகளை விட ஜெர்மனியில் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கையும் மிக குறைவே உள்ளது, இதுவரை அங்கு சுமார் ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 152 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது . ஆனால் அங்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை வெறும் 6993 பேர் மட்டுமே,
இந்நிலையில் மற்ற உலக நாடுகள் ஜெர்மனியின் மருத்துவத் துறையையும் அது வைரஸை கட்டுப்படுத்தவும் பாதிக்கப்பட்ட நோயாளிகளை மீட்கவும் எடுத்துக்கொண்ட சிரத்தையை வெகுவாக பாராட்டியுள்ளன, எங்கள் ஜெர்மனியின் முக்கிய பொது சுகாதார ஆலோசனை குழுவான ராபர்ட் கோச் நிறுவனம், ஜெர்மனியில் புதிதாக கொரோனா வைரஸ் பரவுவது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது புதிய கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவித்துள்ளது, சில நாட்களுக்கு முன்பு வரை நாட்டின் வைரஸ் பரவல் விகிதம் 1 என இருந்த நிலையில் தற்போது அதன் வீதம் - 0.71 ஆகக் குறைந்துள்ளது. அதாவது நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் அதை சராசரியாக 0.71 நபர்களுக்கு பரப்புகிறார்கள் என கணிக்கப்பட்டுள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது அதாவது கடந்த வாரம் வரை நாள் ஒன்றுக்கு 800 முதல் 1500 பேருக்கு தொற்று ஏற்பட்டு வந்த நிலையில் , தற்போதைய அதன் எண்ணிக்கை வெறும் 685 ஆக குறைந்துள்ளது .
இது ஒரு நல்ல செய்தி என அந்த குழு தெரிவித்துள்ளது இது குறித்து தெரிவித்துள்ள ஆர்.கே.ஐ யின் தலைவரான லோதர் வைலர் நீண்ட நாளைக்கு பின்னர் ஒரு நல்ல செய்தியை உச்சரித்து உள்ளார் என அந்நாட்டு மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர். நாட்டில் இதே நிலையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் எனவே சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது உள்ளிட்டவற்றை முறையாக பின்பற்ற வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார் , அதாவது மீண்டும் இரண்டாவது அலை இருக்கும் என்பது உறுதியாக சொல்லப்படுகிறது, அதில் பெரும்பாலான விஞ்ஞானிகள் உறுதியாக உள்ளனர், மூன்றாவது அலையும் இருப்பதற்கும் வாய்ப்புள்ளது ஆனால் எதிர்காலத்தில் உருவாகும் எத்தனை அலைகளையும் எதிர்கொள்ளும் அளவில் நாடு தயாராக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஜெர்மனியில் சராசரியாக நாளொன்றுக்கு ஒரு லட்சத்து 42 ஆயிரம் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த அவர் , தற்போது ஊரடங்கு தளர்த்தப் பட்டிருப்பதால் பரிசோதனையில் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது அவசியம் என அவர் தெரிவித்துள்ளார் .