ஜப்பானில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை கட்டித் தழுவி தனது நட்பை பரிமாறினார்.

ஜி7 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் தலைநகர் ஹிரோஷிமா நேற்று சென்றடைந்தார். இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனை மோடி சந்தித்தார். இரண்டு தலைவர்களும் கட்டிப் பிடித்து தங்களது நட்பை வெளிப்படுத்திக் கொண்டனர்.

நரேந்திர மோடி தனது இருக்கையில் அமர்ந்திருந்தார். இதற்கிடையில், ஜோ பைடன் அவரை நோக்கி வந்தார். பைடன் வருவதைப் பார்த்த நரேந்திர மோடி, பைடன் தனக்கு அருகில் வரும்போது எழுந்தார். இதையடுத்து இரு தலைவர்களும் ஒருவரையொருவர் கட்டித்தழுவினர். சிறிது நேரம் பேசினார்கள். அப்போது, அவர்கள் ஒருவரையொருவர் கைகளை பிடித்தபடி இருந்தனர்.

Scroll to load tweet…

பிரதமர் நரேந்திர மோடி, ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷால்ஸை சந்தித்தார். இரு தலைவர்களும் சுவரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

Scroll to load tweet…

நரேந்திர மோடி வியட்நாம் பிரதமரை சந்தித்தார்

பப்புவா நியூ கினியாவை தன்வசப்படுத்திய சீனா; அலறும் அமெரிக்கா; பிரதமர் மோடியின் முதல் பயணம்!!

நரேந்திர மோடி வியட்நாம் பிரதமர் பாம்மின் சின்கை சந்தித்தார். இந்தியா-வியட்நாம் ஒத்துழைப்பை மேலும் பன்முகப்படுத்துவதற்கான வழிகள் விவாதிக்கப்பட்டதாக அவர் ட்வீட் செய்துள்ளார். இந்தியா மற்றும் வியட்நாம் இடையே வலுவான உறவு இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். உலக நன்மைக்கு இரு நாடுகளும் பங்களிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Scroll to load tweet…

நரேந்திர மோடி தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலை சந்தித்தார். "ஐ.டி., தொழில்நுட்பம், பிற துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி நாங்கள் பேசினோம். வணிக உறவுகளை அதிகரிப்பதுடன், பாதுகாப்பு உறவு விவாதங்களில் முக்கிய இடத்தை அடைந்துள்ளோம்'' என்று அவர் ட்வீட் செய்துள்ளார். 

அணு ஆயுதம் வேண்டாம்.. இந்தியா - சீனா பிரச்சனைக்கு காரணம் என்ன? பிரதமர் மோடி ஓபன் டாக் !!