Pervez Musharraf: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் காலமானார்

நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்றுவந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஷ் முஷாரப் 79 வயதில் காலமானார்.

Former Pakistan President Pervez Musharraf Dies At 79 After Prolonged Illness

நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் அவதியுற்றுவந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பர்வேஷ் முஷாரப் 79 வயதில் காலமானார். அமிலாய்டோசிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்ட அவர் துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் உயிரிழந்தார்.

பெர்வேஸ் முஷாரப் 1943ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவில் டெல்லியில் பிறந்தார். இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது முஷாரப் குடும்பம் பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரத்துக்குக் இடம்பெயர்ந்தது. முஷாரப் 1964ஆம் ஆண்டு பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்து, படிப்படியாக முன்னேறி தலைமை தளபதி அந்தஸ்தை அடைந்தார்.

இந்தியா - பாகிஸ்தான் இடையே 1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போருக்கு முக்கியக் காரணமாக இருந்தவர் முஷாரப்தான். அந்தப் போரில் பாகிஸ்தான் இந்தியாவிடம் தோல்வி அடைந்து பின்வாங்கியது. அப்போது நவாஸ் ஷெரிப் பாகிஸ்தான் நாட்டுப் பிரதமராக இருந்தார்.

Jupiter Moons: வியாழன் கிரகத்துக்கு 92 நிலவுகள்! 12 புதிய துணைக்கோள்கள் கண்டுபிடிப்பு!

Former Pakistan President Pervez Musharraf Dies At 79 After Prolonged Illness

முஷாரப் ராணுவத்தில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ராணுவப் புரட்சியை ஏற்படுத்தி, நவாஸ் ஷெரீப் ஆட்சியைக் கவிழ்த்தார். பின் பாகிஸ்தான் அதிபராகவும் பொறுப்பேற்றார். 2001ஆம் ஆண்டு காஷ்மீர் பிரச்சினையைத் தீர்க்க இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

2007ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதியைப் பதவி நீக்கம் செய்தார். அதிலிருந்து அவருக்கு பாகிஸ்தான் மக்களிடையே இருந்த செல்வாக்குக் குறைய ஆரம்பித்தது. அதே ஆண்டு ஜூலை மாதம் முஷாரப் பிறப்பித்த உத்தரவைத் தொடர்ந்து, இஸ்லாமாபாத் செம்மசூதியை பாகிஸ்தான் ராணுவம் சுற்றி வளைத்தது.

மசூதிக்குள் நுழைந்த பாகிஸ்தான் ராணுவம் அங்கு பதுங்கி இருந்த அல்-கைதா ஆதரவுத் பயங்கரவாதிகளைக் கொன்றது. அதே ஆண்டில் துபாயிலிருந்து பாகிஸ்தான் திரும்பி இருந்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் பெனாசிர் பூட்டோ ராவல்பிண்டியில் நடைபெற்ற பேரணியின்போது சுட்டுக் கொலைப்பட்டார்.

2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ஆம் தேதி பாகிஸ்தான் அதிபர் பதவியிலிருந்து விலகினார். பின்னர் பாகிஸ்தானிலிருந்து வெளியேறி துபாய் சென்று வசித்து வந்த முஷாரப் 2013ஆம் ஆண்டு பாகிஸ்தான் திரும்பி தேர்தலில் போட்டியிட விரும்பினார். ஆனால், தேர்தலில் போட்டியிட முடியாதபடி தகுதிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் 2016ஆம் ஆண்டு மீண்டும் துபாய் சென்று அங்கு வசித்துவந்தார்.

Chinese balloon: சீன பலூனை சுட்டு வீழ்த்தியது அமெரிக்கா: பதிலடி கொடுப்போம் என சீனா உறுதி

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios