ஊழல் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதமர் கைது!!
ஊழல் குற்றச்சாட்டில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது நாட்டின் வளர்ச்சி திட்டங்களில் ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மாநில தொகுப்பு நிதி திட்டத்தை தொடங்கிய நஜீப், 1எம்பிடி என்னும் இந்த திட்டத்தின் நிதியில் இருந்து பில்லியன் டாலர்கள் வரை நிதி மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும் கடந்த 2009ல் நஜீப் ஆட்சிக்கு வந்தவுடன், 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மோசடி செய்துள்ளதாக அமெரிக்க உளவு அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. அவற்றில் 681 மில்லியன் அமெரிக்க டாலர்கள் நஜீப்பின் சொந்த வங்கிக் கணக்குக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை தனது மனைவிக்கு நகை வாங்க செலவு செய்துள்ளதும் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், நஜீப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளார்.