நாட்டை நாசம் பண்ணிட்டு நாட்டாமை பண்ண போறானாம் பாகிஸ்தான்காரன்.. ஆப்கனுக்கு விரைகிறார் குரேஷி .
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் 150 இந்தியர்களை பிடித்து வைத்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் இந்தியர்கள் காத்திருந்தபோது தலிபான்கள் அவர்களை கடத்திச் சென்றதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தலிபான்களுக்கு ஆதரவாக செயல்பட பாகிஸ்தான் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் குரேஷி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தலிபான் கிளர்ச்சியாளர்கள் போரினால் பாதிக்கப்பட்ட நாட்டின் முன்னாள் ஆட்சியாளர்களுடன் பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தி அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் அதிகாரத்தை உருவாக்க முன்வர வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.ஆப்கானிஸ்தான் முழுவதும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. புதிய நிர்வாக கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி, ஆப்கானிஸ்தானுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்ட ஆப்கானிஸ்தான் முன்னாள் ஆட்சியாளர்கள் பிரதிநிதிகள் குழு, அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் ராணுவ தலைவர் ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வா மற்றும் இன்டர் சர்வீசஸ் தலைவர் உள்ளிட்ட உயர் சிவில் மற்றும் ராணுவ தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், புதிய அரசாங்கம் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் இருக்க வேண்டும், ஆப்கனிஸ்தானில் பேச்சு சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்ய வேண்டும், அப்படி இருந்தால் மட்டுமே உலக நாடுகள் ஆதரவு தெரிவிக்க முன்வரும், பழைய ஆட்சியாளர்களை உள்ளடக்கிய ஒரு ஆட்சி நிர்வாகத்தை உருவாக்க வேண்டும் எனகோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் இதை மேற்கோள் காட்டிய பாகிஸ்தான் வெளியுறவு துறை அமைச்சர் ஷா முகமது குரேஷி ஆப்கானிஸ்தானில் ரத்தக்களறி எதிர்கொள்ள யாரும் தயாராக இல்லை, தலிபான் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டன நாட்டில் அமைதியையும் ஸ்திரத்தன்மையும் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். இதில் பாகிஸ்தான் நேர்மையாக, நடுநிலையோடு பங்காற்றுவதில் உறுதியாக உள்ளது.ஆப்கானிஸ்தானில் உள்ள எங்கள் தூதுவரும் வெவ்வேறு ஆப்கனிஸ்தான் ஆளுமைகளுடன் தொடர்பில் இருக்கின்றனர். பாகிஸ்தானுக்கு விஜயம் செய்த ஆப்கன் தூதுக்குழு முன்வைத்துள்ள கோரிக்கைகளை பரிசீலிக்க தலிபான்கள் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சவாலான சூழலையை தலிபான்கள் எப்படி எதிர்கொள்ளப்போகிறார்கள் என்பதை பொறுத்தே ஆப்கனின் எதிர்காலம் அமையபோகிறது எனவே, இது தலிபான்களில் நிர்வாகத்திறமைக்கு சோதனையான தருணம் எனவும் அவர் கூறியுள்ளார். ஆப்கனிஸ்தானின் இந்த தூயர நிலைக்கு பாகிஸ்தான்தான் காரணம் என அந்நாட்டு மக்கள் குமுறி வரும் நிலையில் ஆப்கனிஸ்தானில் அமைதி நிலைநாட்ட நடுநிலையோடு பாகிஸ்தான் செயல்படும் என அந்நாட்டு அமைச்சர் கூறியிருப்பது பலரையும் கொதிப்படைய வைத்துள்து.