தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளரான திருநங்கை...!
பாகிஸ்தானை சேர்ந்த தொலைக்காட்சி ஒன்றில் செய்தியை திருநங்கை ஒருவர் முதல் முறையாக தொகுத்து வழங்கியுள்ளார்!
மூன்றாவது பாலினமாக கருதப்படும் திருநங்கைகள், முயற்சியின் காரணமாக ஒவ்வொரு துறையிலும் தங்களை நிரூபித்த வருகின்றனர். அந்த வகையில், தொலைக்காட்சி ஒன்றில் செய்திவாசிப்பாளராக திருநங்கை ஒருவர் இருந்து வருகிறார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த தனியார் தொலைக்காட்சி ஒன்றில்தான் திருநங்கை ஒருவர் செய்தி வாசிப்பாளராக இருந்து வருகிறது. தொலைக்காட்சி ஒன்றில் திருநங்கை ஒருவர் செய்திவாசிப்பாளராக இருப்பது இதுவே முதன் முறையாகும்.
பாகிஸ்தானில் சமீபத்தில், திருநங்கைகள் தங்களுடைய பாலின அடையாளத்தை முடிவு செய்து கொள்ளும் அதிகாரம், பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டை உயர்த்திக்கொள்ள மசோதா ஒன்றை அண்மையில் நறைவேற்றியது.
இந்த நிலையில்தான், திருநங்கை ஒருவர் தனியார் தொலைக்காட்சியில் செய்தியை தொகுத்து வழங்கியுள்ளார். இவரது பெயர் மாவியா மாலிக். இவருக்கு பல்வேறு தரப்பினர், வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு, அவர்களை பாராட்டியும் வருகின்றனர்.