Asianet News TamilAsianet News Tamil

'End card'இல்லை போல.."florona"எனும் புதிய கொரோனா வைரஸ்..இஸ்ரேலில் கண்டுபிடிப்பு..

கொரோனா,டெல்டா அடுத்ததாக ஒமைக்ரான் தற்போது அதன் கோர முகத்தை காட்டி வரும் நிலையில்,  இஸ்ரேலில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் கண்டறியப்பட்டுள்ள இந்த புதிய வகை கொரோனா வைரஸ்க்கு "ப்ளோரனா" என்று பெயரிடப்பட்டுள்ளது.
 

First new variant Florona case report in Israel
Author
Israel, First Published Jan 1, 2022, 4:44 PM IST

கொரோனா வைரஸின் அறிகுறிகளுடன், சாதாரண காய்ச்சலுக்கான (ப்ளூ) பாதிப்புகளும் ஏற்படுவதால், இதற்கு ஃபுளுரோனா என்று பெயரிடப்பட்டுள்ளது. மத்திய இஸ்ரேலின் பெட்டாஹ் திக்வா நகரில் அமைந்துள்ள ஒரு மருத்துவமனையில் அண்மையில் குழந்தையைப் பெற்றெடுத்த பெண்ணுக்கு, இந்த புதிய ஃபுளுரோனா வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பெண், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர் என்பதும், இவரது மருத்துவப் பரிசோதனையில், சாதாரண காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகளுடன், கொரோனா பாதிப்பும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனினும், அவருக்கு பெரிய உடல்நலப் பாதிப்புகள் ஏதுமில்லை, லேசான அறிகுறிகளே தென்படுகின்றன, விரைவில் அவர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புவார் என்றும் இஸ்ரேல் நாளேடான யேதியோத் அஹ்ரோநோத் பத்திரிக்கையில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் நாட்டின் சுகாதாரத்துறை ஆய்வுகளை முன்னெடுத்துள்ளன. சாதாரண காய்ச்சலுக்கான கிருமியும், கொரோனாவின் மோசமான பாதிப்புகளும் ஒன்று சேர்ந்து மிக மோசமான பாதிப்பு ஏற்படுத்துமோ என்ற கோணங்களில் சோதனை நடைபெறுகிறது. ஏற்கனவே, ஒமைக்ரான் பாதிப்பினால், இஸ்ரேலில் ஐந்தாவது கொரோனா அலை தாக்கியிருக்கும் நிலையில், தற்போது புதிய வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளது அந்நாட்டையே தற்போது கவலையில் ஆழ்த்தி உள்ளது. கொரோனா வைரஸில் தொடங்கி ஆல்ஃபா, பீட்டா, காமா, டெல்டா, ஒமைக்ரான், டெல்மைக்ரான் என வைரஸ் உருமாற்றம் அடைந்து வருகிறது. உலக அளவில் ஒமைக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி அச்சுறுத்தி வரும் நிலையில் அடுத்த வைரஸ் இஸ்ரேலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் ஃப்ளோரினா எனும் இரட்டை உருமாற்ற வைரஸை மருத்துவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இன்ஃப்ளூயன்ஸா வைரஸும், கரோனா வைரஸும் சேர்ந்து ஒருங்கிணைந்து இருப்பதால், ஃப்ளோரோனா வைரஸ் எனும் பெயர் வைத்துள்ளனர் என்று அராப் நியூஸ் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் அனைத்தும் டெல்டா வைரஸ், ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராகக் கடுமையாகப் போராடி வரும் நிலையில் இஸ்ரேலில் ஃப்ளோரோனோ வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது மேலும் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரான் வைரஸ், 2 மாதங்களுக்குள் உலகில் 120 க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவிவிட்டது. ஏற்கெனவே மக்களை பாதித்துவந்த டெல்டா வைரஸை ஓரங்கட்டி, தற்போது ஒமைக்ரான் வைரஸால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு நபருக்கு ஒரே நேரத்தில் இன்ஃப்ளூயன்ஸா வைரஸும், கொரோனா வைரஸும் தாக்கினால் வரக்கூடியது ஃப்ளோரோனா என்று இஸ்ரேல் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டுப் பரிசோதனைக்கு மருத்துவர்கள் அனுப்பியுள்ளனர்.

கெய்ரோ பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர்“ ஃப்ளோரோனா வைரஸ் மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தலாம். ஏனென்றால் இரு வைரஸ்கள் மனிதர்களை ஒரே நேரத்தில் தாக்கும்போது நோய் எதிர்ப்பு சக்தி திறன் கடுமையாக பாதிக்கும்” எனத் தெரிவித்துள்ளார். உலகில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் மக்களுக்கு 3-வது தடுப்பூசியாக பூஸ்டர் டோஸைச் செலுத்தி வருகின்ற வேளையில் இஸ்ரேல் அரசு, மக்களுக்கு  4-வது தடுப்பூசியையும் செலுத்தத் தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios