துபாயில் உள்ள மெரினா பகுதியில் சுமார் 1,105 அடி உயரம் கொண்ட, உலகில் மிகவும் உயரமான கட்டிடங்களில் ஒன்றான டார்ச் டவரின் 9 ஆவது மாடியில் இன்று அதிகாலை 1 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

உலகின் உயர்ந்த கட்டடங்களில் ஒன்று துபாய் டார்ச் டவர். சுமார் 1,105 அடி உயரம் கொண்ட இந்த கட்டடம் 79 மாடிகளைக் கொண்டது. இந்த கட்டடத்தின் 9ஆவது தளத்தில் இன்று அதிகாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. மளமளவென எரிந்த தீ மற்ற தளங்களுக்கும் பரவியது.

தகவலறிந்து அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் அங்கிருந்தவர்களை உடடினயாக வெளியேற்றினர். பின்னர் சுமார் 2 மணிநேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

உள்ளூர் மக்கள் இதுதொடர்பான வீடியோவை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வேகமாக  பரவி வருகிறது. தீ விபத்தால் அந்த பகுதியில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

79 மாடிகள் கொண்ட டார்ச் டவர் கடந்த 2011-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. ஏற்கனவே, கடந்த 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.