கஸ்டமரை ரவுண்டு கட்டி தாக்கும் மெக்டொனால்டு ஊழியர்..!  வெளியான அதிர்ச்சி வீடியோவால் பரபரப்பு..!

மெக்டொனால்டு ஊழியர் ஒருவர், கஸ்டமர் ஒருவரை சரமாரியாக தாக்கிய வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பார்த்த மக்கள் பெரும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர்

சமூக வலைதலங்களான, பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், dayag என்ற நபர் இந்த வீடியோவை பதிவிட்டு சில விவரங்களை எழுதி  உள்ளார்.

அதில், கஸ்டமர் ஒருவர், ப்ரீ சோடா வேண்டும் என கேட்டுக் கொண்டு  உள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் ஒருவர், ப்ரீ சோடா கிடைக்க  கூடாது என்பதற்காக, அந்த இயந்திரத்தை மூடி  உள்ளார்.

இதனை கண்ட கஸ்டமர், ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேள்வி கேட்டு  அவருடன் சண்டையில் ஈடுபட, அருகில் இருந்த தட்டை எடுத்து அந்த ஊழியர் மீது தாக்கி உள்ளார். பின்னர் இதனால் மிகுந்த கோபத்திற்கு ஆளான ஊழியர் மற்ற சக ஊழியர்களுடன் சேர்ந்துக் கொண்டு,  கஸ்டமரை மிகவும் கடுமையாக தாக்கி உள்ளனர்

இதனை தொடர்ந்து, அந்த பெண்ணின் தலையை சுவரில் இடித்தும், ஆடையை கிழித்தும் மிகவும் மோசமாக தாக்கி உள்ளனர். இந்த வீடியோ காட்சியில், இருவரும் தகாத வார்த்தைகளால் ஆங்கிலத்தில் பேசுவதை  கேட்க முடிகிறது.

இந்த காட்சியை அங்குள்ள சக கஸ்டமர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக  வலைத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த மக்கள் பெரும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். மேலும் இவர் யாரென்றும், எந்த இடத்தில் எதற்காக இது போன்ற தாக்குதல் என்ற பல கோணத்தில் விசாரணை தொடங்க உள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.