Asianet News TamilAsianet News Tamil

"இன்றைய தலைவர்கள் பலருக்கு நடுவில் பிடல் காஸ்ட்ரோ" – இமயம் போல் தோன்றிய சிம்ம சொப்பனம்...!!!

fidel castro-died-pdxvh9
Author
First Published Nov 26, 2016, 11:51 AM IST


1926 ஆகஸ்டு 13ம் தேதி, கியூபாவின் பிரான் அருகில் ஒரு கரும்பு தோட்டத்தில் பண்ணையார் ஏன்ஜல் காஸ்ட்ரோ என்பவருக்கு மகனாக பிறந்தார். காஸ்ட்ரோ குடும்பம் மிகவும் நடுத்தர குடும்பம். ஏன்ஜல் ரஸ் காஸ்ட்ரோ ஸ்பெய்னில் இருந்து கியூபாவுக்கு பிழைக்க வந்தார். அவர் கியூபாவின் ஓரியன்ட் மாகாணத்தில் குடியேறி, கடுமையாக உழைத்து ஒரு பண்ணையார் ஆனார்.

அவரின் கீழ் ஆயிரக்கணக்கான கியூபர்கள் வேலை செய்தனர். 1940 ஏக்கர் நிலத்திற்கு உரிமையாளர் ஆனார் ஏன்ஜல். பிடலின் தாய் லினா. இவர் ஒரு க்யூப பெண்மணி. ஏழை விவசாயின் மகள். இத்தம்பதிக்கு முதல் குழந்தையாக காஸ்ட்ரோ பிறந்தார்.

fidel castro-died-pdxvh9

காஸ்ட்ரோ பிறந்த பின்னரே இத்தம்பதியினர் திருமணம் செய்து கொண்டனர். அதனால் சிறுவன் காஸ்ட்ரோவிற்கு அவனது பெற்றோரின் திருமணத்தை நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது. பிடல் இயற்கையாகவே ஏழைகளின் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார்.

1930 ல் கியூபாவில் பொருளாதார நெருக்கடி காரணமாக காஸ்ட்ரோ தமது 5 வயதில், சான்டியாகோ டி-க்யூபா சென்றார். ஏஞ்சலின் குடும்ப நண்பர் வீட்டுக்கு காஸ்ட்ரோவும் அவரது சகோதர சகோதரிகளும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஏஞ்சலின் குடும்ப நண்பர் ஒரு ஆசிரியர். ஆனால் மிகவும் ஏழை. அதனால் ஏஞ்சல் குழந்தைகளுக்கு அனுப்பும் பணத்தை அந்த முழு குடும்பமும் பகிர்ந்து கொண்டது.

இதனால் காஸ்ட்ரோவின் சகோதரிகள் அனைவரும் வீடு திரும்பிவிட்டனர். ஆனால் காஸ்ட்ரோ மட்டும் அங்கேயே தங்கி பள்ளிப் படிப்பை தொடங்கினார்.

சான்டியாகோ டி-கியூபாவில் லா சேல் எனும் பள்ளியில் காஸ்ரோ படித்தார். பின் காஸ்ட்ரோ டோலோரஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டார். 1941 ல் காஸ்ட்ரோ பெலன் கல்லூரியில் சேர்ந்தார். இங்கு படிக்கும்போதே காஸ்ட்ரோவுக்கு கம்யூனிசம் எனும் பெயர் தெரியவந்தது.

1945ம் ஆண்டு 2ம் உலகப்போர் முடிவுக்கு வந்தபோது காஸ்ட்ரோ உயர்கல்வியை முடித்திருந்தார். ஸ்பானிய உள்நாட்டுப் போரும் முடிவுக்கு வந்தது. காஸ்ட்ரோவிற்கு அப்போது கம்யூனிசம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவர்களை எல்லோரும் ஒதுக்கிவைத்தார்கள் என்பது மட்டும் அவருக்கு தெரியும்.

fidel castro-died-pdxvh9

நாட்கள் செல்ல செல்ல காஸ்ட்ரோவும் கம்யூனிசத்தை மறந்து போனார். பின் காஸ்ட்ரோ 1945ல் ஹவானா பல்கலைகழகத்தில் சட்டம் பயின்றார். இங்குதான் காஸ்ட்ரோ கம்யூனிசவாதியாக பரிமாணம் பெற்றார்.

காஸ்ட்ரோ, ஹவானா பல்கலைகழகத்தில் சேர்ந்த பிறகு சிறிது சிறிதாக அரசியலி ஈர்க்கப்பட்டார். கல்லூரி அரசியலில் பங்கு கொண்டார். அப்போது 2 முக்கிய கட்சிகள் மாணவர்கள் மத்தியில் இயங்கி கொண்டிருந்தன. ஒன்று 1925ல் தொடங்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி, மற்றொன்று ஜோஸ் மார்த்தியை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட ஆர்த்தோடாச்சோ கட்சி. காஸ்ட்ரோ கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். முதல் ஆண்டிலேயே பிரச்சாரத்தில் ஈடுபட்டு வெற்றி பெற்றார்.

கல்லூரியில் படிக்கும்போதே கம்யூனிச கட்சிகளில் சேர்ந்தார். போராட்டங்களும் செய்தார். பேச்சுத் திறமையால் பிடல் மக்களைக் கவர்ந்தார்.

1952 ல் அமெரிக்காவின் கைப்பாவையான பாடிஸ்டா, கியூபாவின் ஆட்சியை கைப்பற்றினார். அப்போது 'குற்றம் சாட்டுகிறேன்' என்னும் பத்திரிகையை துவங்கிய காஸ்ட்ரோ, பாடிஸ்டா அரசின் தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்தி, புரட்சிக்கு மக்களை அணிதிரட்டினார்.

fidel castro-died-pdxvh9

காஸ்ட்ரோ முதன்முதலில் பிரச்சாரம் செய்தது ஓரியண்ட் மாகாணத்தில் ஆதன்டிக் கட்சி சார்பில் போட்டியிட்ட அவரின் ஒன்று விட்ட சகோதரர் எமிலியோவிற்காக. அப்போது காஸ்ட்ரோவின் வயது 14. பைரனில் உள்ள அனைவரின் வீட்டிற்கும் சென்று யார் யார் எந்த எந்த கட்சிகளின் சார்பாக நிற்கிறார்கள், எப்படி வாக்களிக்க வேண்டும் என்று விளக்குவது பிடலின் பொறுப்பு. வெற்றி பெற்றால் குதிரை வாங்கி தருவதாக எமிலியோ கூறியிருந்ததால், அதற்காக முனைப்பாகப் பிரச்சாரம் செய்து அரபிய குதிரையையும் பெற்றார்.

கல்லூரியில் இறுதியாண்டு நடக்கும் தேர்தலுக்கு பிடல் முதல் ஆண்டில் இருந்தே கடுமையாக பிரச்சாரம் செய்தார். அந்த தேர்தலில் வெற்றியும் கண்டார்.

1953ம் ஆண்டு ஜூலை 26ல் காட்ரோ, மொன்காடாத் ராணுவமுகாமின் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டார். திட்டம் சரியாக இருந்தும், பிடெலின் வண்டியில் கோளாறு ஏற்பட்டதால், இருளில் மற்ற வீரர்கள் வழி தவறினர். இதனர்ல், அந்த தாக்குதல் தோல்வியை தழுவியது. காஸ்ட்ரோவும் மாட்டிக்கொண்டார்.

fidel castro-died-pdxvh9

1953 ல் காஸ்ட்ரோவின் வழக்கு நீதி விசாரணைக்கு வந்தது. காஸ்ட்ரோ புரட்சிக்கு திட்டம் தீட்டியதை ஒப்புக்கொண்டார். மேலும் பாடிஸ்டாவின் அரசையும் தோலுரித்து காட்டினார்; அமெரிக்காவைக் கடுமையாக சாடினார். நீதி மன்றத்தில் ஃபிடெல் நிகழ்த்திய இந்த உரையே பின்னாளில் 'வரலாறு என்னை விடுதலை செய்யும்' (THE HISTORY WILL ABSOLVE ME) என்று வெளிவந்த நூலாகும்.

பின் மே 15 1955 ல் காஸ்ட்ரோ விடுதலை செய்யப்பட்டார். பின்னர் மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோ கொரில்லா முறை தாக்குதல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

மெக்சிகோவில் காஸ்ட்ரோ இருக்கும் போதுதான் அவருக்குத் தேச எல்லை கடந்த மனிதநேய போராளியான சேகுவேரா அறிமுகம் ஆனார்.

அவர் கியூப விடுதலை போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டார். காஸ்ட்ரோவும் சேகுவெராவும் க்ரான்மா எனும் கள்ளத்தோணி மூலம் கியூபா வந்தடைந்தனர். அடர்த்தியான மரங்கள் நிறைந்த சியார்ரா மேஸ்தாரவில் தங்கி இருந்தபடியே கியூப விவசாயிகளையும், இளைஞர்களையும் புரட்சிக்கு தயார்ப்படுத்தினார். பின் படிப்படியாக முன்னேறி கியூபாவில் காஸ்ட்ரோ தலைமையிலான சோசியலிச குடியரசை நிறுவினர்.

காஸ்ட்ரோவின் ஆட்சியின்கீழ் கியூபா வந்ததும் அமெரிக்கா அவரை தன்வசம் இழுக்க முயற்சித்தது. ஆனால் அதற்கு காஸ்ட்ரோ மறுத்து, 'கியூப வளங்கள் கியூப மக்களுக்கே சொந்தம்' என்று கூறிவிட்டார். அதனால் அமெரிக்கா கியூபா மீது பொருளாதார தடையை விதித்தாலும், காஸ்ட்ரோ அதனைச் சமாளித்தார்.

fidel castro-died-pdxvh9

அமெரிக்கா தனது சி.ஐ.ஏ அமைப்பின் மூலம் காஸ்ட்ரோவை 638 முறை கொல்லத் திட்டம் திட்டியும் அதன் முயற்சிகள் பலிக்கவில்லை.

கியூபாவில் அனைவருக்கும் இலவசக் கல்வியை காஸ்ட்ரோ அறிமுகப்படுத்தினார். 1995 ஆம் ஆண்டின் யுனெஸ்கோ ஆய்வின்படி கியூபாவில் படிப்பறிவு சதவிகிதம் 96 ஆகும். மேலும் கியூபாவின் தொழில் நுட்பத்துறையில் பணி புரிபவர்களில் 60 சதவிகிதத்தினர் பெண்கள் ஆவர். மருத்துவ துறையிலும் கியூபர்கள் சிறந்து விளங்கினர். மகப்பேற்றின் போது தாய்மார்களின் இறப்பு விகிதம் உலகிலேயே மிகக்குறைவாக இருந்தது.

fidel castro-died-pdxvh9

உணவு செரிமானமின்மையால் பிடெல் 2008ம் ஆண்டில் பதவி விலகினார். அவருக்கு பின் அவரின் தம்பி ராவுல் காஸ்ட்ரோ அதிபராக பதவியேற்றார்.

தனது வாழ்நாளில் கியூபாவை முடித்து கட்டுவதே காஸ்ட்ரோவின் நோக்கமாக இருந்தது.அதில் அவர் ஓரளவு வெற்றியும் பெற்றார் என்றே சொல்ல வேண்டும்.செப்டெம்பெர் 2005ல் இருந்து செப்டெம்பெர் 2007க்குள் சுமார் 77,000 கியூபர்கள் கள்ளத்தோணி, படகு, மரக்கட்டை என்று கிடைத்ததில் தொத்திக்கொண்டு கியூபாவை விட்டு ஃப்ளோரிடாவுக்கு தப்பி ஓடினர்.

பிடல் காஸ்ட்ரோவின் இந்த மரணம் உலக நாடுகளில் உள்ள பல்வேறு நாட்டு தலைவர்களுக்கும் முன்மாதிரியாக விளங்கும். எத்தனை வயதானாலும் பதவியை கெட்டியாக பிடித்துக்கொண்டு விடமறுக்கும் இன்றைய தலைவர்கள் பலருக்கு நடுவில் பிடல் காஸ்ட்ரோ இமயம் போல் உயர்ந்து நிற்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios