Asianet News TamilAsianet News Tamil

“ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவை ஆடிப்பாடி கொண்டாடிய அமெரிக்கர்கள்”

fidel castro-died-NL9V8H
Author
First Published Nov 27, 2016, 5:51 PM IST


கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ கடந்த வெள்ளிக்கிழமை இரவு காலமானார். இவர் கியூபா மக்களின் நம்பிக்கையைப் பெற்று, புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த அவர், யாராலும் தகர்க்க முடியாத ஆட்சி நடத்தினார்.

இவரின் மறைவிற்கு இந்திய பிரதமர் மோடி, பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், கியூபாவின் முன்னாள் அதிபர் பிடல் காஸ்ட்ரோவின் மறைவை மியாமி நகரத்தினர் கொண்டாடியுள்ளனர்.

fidel castro-died-NL9V8H

பிடல் காஸ்ட்ரோவின் கொள்கைகளுக்கு எதிரான பலர் அந்நாட்டை விட்டு அமெரிக்காவின் மியாமி நகரம் உள்ளிட்ட பல பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர். 
பிடல் காஸ்ட்ரோ நேற்று மரணம் அடைந்த செய்தியை அறிந்த அவரது அதிருப்தியாளர்கள் நகரின் முக்கிய பகுதிகளில் ஆட்டம், பாட்டத்துடன் மேளங்களை அடித்தும் மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

 
இதுபற்றி ஒருவர் கூறும்போது, ஒருவரின் மரணத்தை மற்றவர்கள் கொண்டாடி மகிழ்வது என்பது கவலைக்குரிய செயல்தான். இப்படிப்பட்டவர் பிறக்காமலே இருந்திருக்கலாம் என்பதுதான் இந்த கொண்டாட்டத்தின் நோக்கமாகும் என்று தெரிவித்த அவர், நரகத்துக்கு சென்றிருக்கும் பிடல் காஸ்ட்ரோவால் தனது வேலை பறிபோய் விடுமோ  என அவரைப்பற்றி இனி சாத்தான்தான் கவலைப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios