தலிபான் கண்களில் விரலை விட்டு ஆட்டும் பெண் நிருபர்.. எப்பா என்னா தில்லு..
இது அவர்கள் வெளியேற வேண்டிய நேரம், அவர்கள் ஏற்கனவே ஏராளமான உயிர்களையும், பணத்தையும் இழந்து விட்டனர் என தாலிபன்கள் இருமாப்புடன் அதில் கூறுகின்றனர். சில தாலிபான்கள் அமெரிக்காவினுடைய ஆயுதங்களை வைத்துள்ளனர்.
தலிபான்கள் ஆப்கனிஸ்தான் முழுவதையும் கைப்பற்றியுள்ள நிலையில், பெண்கள் இனி அங்கு தலை நிமிர முடியாது எனவும், தலிபான்கள் பெண்களை மிகக் கேவலமாக நடத்துவார்கள் என சர்வதேச சமூகம் கூக்குரல் எழுப்பும் நிலையில், வெற்றிக்களிப்பில் உள்ள தலிபான்களுக்கு மத்தியில் நின்று இஸ்லாமிய பெண் செய்தியாளர் ஒருவர், நேரடி ஒளிபரப்பில் செய்தி வழங்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
சிஎன்என் தொலைக்காட்சியின் செய்தியாளரான கிளாரிசா வார்டுதான் அந்த தைரியமிக்க செய்தியாளர், அவரின் இந்த செயலுக்காக பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். அதற்கான வீடியோ வெளியாக நிலையில், அந்தப் பெண் செய்தியாளர் சர்வதேச அளவில் பிரபலம் அடைந்துள்ளார். தாலிபன்கள் வசம் வந்துள்ள ஆப்கனிஸ்தானில் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும், அதே நேரத்தில் பெண் என்பதால் தாலிபன்கள் தன்னை எப்படி நடத்தினார்கள் என்பது குறித்தும் அவர் கூறியுள்ள தகவல்கள்.
தாலிபன்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை தோலுரிப்பதாக அமைந்துள்ளது. தொலைக்காட்சிப் பெட்டியை திறந்தாலே, காபுல் நகரம் தலிபான்களிடம் விழுந்தது.. தலிபான்கள் காபுலை நெருங்கும்போதே அலறியடித்து வெளிநாட்டிற்கு தப்பினார் அதிபர் அஷ்ரப் கனி, ஆப்கன் பெண்களின் 20 ஆண்டுகால சுதந்திரம் முடிவுக்கு வந்துவிட்டது, தப்பித்தால் போதும் என விமான நிலையத்திற்கு முண்டியடித்து படையெடுக்கும் பொதுமக்கள், எங்கு பார்த்தாலும் பதற்றம், மரண ஓலம், இனம் புரியாத பீதி என நிமிடத்துக்கு நிமிடம் ஆப்கனின் அவலநிலை குறித்து செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
பலநாடுகள் தலாபான்களை கண்டிக்கின்றனர், அதில் சில நாடுகள் ஆப்கன்வுடன் சுமுகமான முறையில் உறவு தொடர தயார் என அறிவிக்கின்றன, இந்தக் கலவரத்திற்கு மத்தியிலும், பல சர்வதேச ஊடகங்கள் திலிபான்கள் பிடியில் உள்ள ஆப்கனின் தற்போதைய நிலைமை என்ன என்பதை நேரடியாக கள நிலவரத்தை வழங்கிவருகின்றன. அந்தவகையில் சிஎன்என் தொலைக்காட்சியின் பெண் செய்தியாளர் ஒருவர் தில்லாக தலிபான்களின் மத்தியில் நின்று செய்தி வழங்கி இருப்பது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, அவரின் தைரியத்தை பாராட்டும் அதே நேரத்தில், அவர் கூறியுள்ள தகவல், தலிபான்கள் எவ்வளவு பிற்போக்குத்தனமானவர்கள், எதிர்காலத்தில் அந்நாட்டில் பெண்களுக்கான நிலைமை எப்படி இருக்கும் என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக உள்ளது.
தலிபான்கள் மிக கொடூரமானவர்கள், அவர்களின் ஆட்சியில் பெண்கள் வீதிகளில் தைரியமாக உலாவ முடியாது, தலைமுடல் கால்வரை இழுத்து மூடி புர்கா அணிய வேண்டும், அவசியமில்லாமல் வீதிக்கு வரக்கூடாது, வந்தால் அந்தப் பெண் கொல்லப்படுவாள், டிவி, இன்டர்நெட் வசதிகளை பயன்படுத்த கூடாது, பெண்கள் கல்வி கற்கக் கூடாது, மொத்தத்தில் பெண்களின் எதிர்காலமே பாழாகி விட்டது என ஆப்கன் பெண்கள் அழுது கண்ணீர் வடிக்கின்றனர். இந்நிலையில் சிஎன்என் செய்தியாளர் கிளாரிசா வார்டு காபூலில் கைவிடப்பட்ட அமெரிக்க தூதரகத்திற்கு முன்னர் நின்று, செய்தி வழங்கியுள்ளார். அதில் அவர் கூறியதாவது;-
ஒரே இரவில் ஒட்டுமொத்த ஆப்கனில் நிலைமையும், தலைகீழாக மாறியுள்ளது. எல்லாம் இயல்பு நிலைக்கு வந்ததை போல தோன்றுகிறது, ஆனால் இனம் புரியாத ஒரு பயம் எல்லோர் முகத்திலும் காணப்படுகிறது. எப்போது என்ன நடக்கும் என்று அனுமானிக்க முடியாத ஒரு குழப்பம் நிலவுகிறது என அவர் செய்தி வழங்கிக் கொண்டிர்க்கும் போதே, ஒரு பெண் ஆப்கனில் இவ்வளவு தைரியமாக ஆண்களுக்கு மத்தியில் நின்று, அதுவும் பொதுவெளியில் பேசுவதை அங்குள்ள தாலிபன்கள் வித்தியாசமாக பார்க்கின்றனர். ஒரு சில நொடிகளில் கிளாரிசா வார்டுவை, "ஏய் பொண்ணு ஓரம் போய் நில்லு" என அவர்கள் கூற, உடனே செய்தியாளர் வார்டு பதட்டத்துடன் ஒதுங்கி நிற்கிறார். அந்தக் காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
தான் ஒரு பெண் என்பதால் தன்னை ஒதுங்கி நிற்குமாறு தாலிபன்கள் கூறுவதாகவும், அவர்கள் தன்னை எச்சரித்தவுடன் தனக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது எனவும், அவர் அந்த வீடியோவில் கூறுகிறார். தொடர்ந்து பேசும் அவர் மொத்த ஆப்கனிஸ்தானும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. நகரில் எங்கு பார்த்தாலும் தலிபான்கள் நிறைந்திருக்கிறார்கள். முன்பு காவலர்கள் இருந்த இடங்களில் தாலிபன்கள் நிற்கிறார்கள், நேற்றை விட இன்று பதற்றம் சற்று குறைந்து காணப்படுகிறது. சந்தேகப்படும் வாகனங்களை உடனே நிறுத்தி சோதனை செய்கிறார்கள், வீதிகளில் வெகுசில பெண்களே காணப்படுகிறார்கள், வீதிக்கு வரும் பெண்கள் மிகவும் பயத்துடன் தலை முகம் மறைக்கும் வகையில் உடை அணிந்திருப்பதை பார்க்க முடிகிறது
என்கிறார் கிளாரிசா வார்டு, அந்த செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த தாலிபன்கள் சிலர், எல்லாம் கட்டுப்பாட்டில் உள்ளது, எல்லாம் சரியாகிவிடும் என்றும், யாரும் கவலைப்பட வேண்டாம் என்றும் அவர்கள் கூறுவதாக வார்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கூறுகிறார். அமெரிக்காவுக்கு நீங்கள் சொல்லிக்கொள்ளும் செய்தி என்ன எவர் கேட்க, அவர்களோ, ஆப்கனிஸ்தானில் போதுமான அளவிற்கு அவர்கள் இருந்துவிட்டார்கள்.
இது அவர்கள் வெளியேற வேண்டிய நேரம், அவர்கள் ஏற்கனவே ஏராளமான உயிர்களையும், பணத்தையும் இழந்து விட்டனர் என தாலிபன்கள் இருமாப்புடன் அதில் கூறுகின்றனர். சில தாலிபான்கள் அமெரிக்காவினுடைய ஆயுதங்களை வைத்துள்ளனர். இந்நிலையில் தாலிபான்களால் பழி வாங்கப்படலாம் என்ற அபாயத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள், சிவில் சமூக ஆர்வலர்கள், பெண்கள், மனித உரிமை பாதுகாவலர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக அங்கு அபயக் குரல் எழுகிறது,
இன்னும் பெண்களுக்கு உரிய கட்டுப்பாடுகளை தாலிபான்கள் அறிவிக்கவில்லை, ஆனால் ஒரு செய்தியாளரான கிளாரிசா வார்டு சுதந்திரமாக ஆண்களுக்கு மத்தியில் நிற்பதையே அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை, உடனே அந்தப் பெண்ணை அதட்டி ஓரம் போ என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். அப்படியெனில் அந்நாட்டிலேயே பிறந்து வாழும் பெண்கள் கதியை என்னிப் பார்த்தால் நெஞ்சம் பதறுகிறது. தலிபான்கள் பெண்களை அடிமைப்படுத்தி கொடுமை படுத்தும் மனபோக்கு கொண்டவர்கள் என்பதற்கு செய்தியாளர் கிளாரிசா வார்டுவிடம் அவர்கள் நடத்து கொண்டதை சாட்சி.