father of srilankan cricketer dhananjaya de silva shot dead
இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்ஜெயா டி சில்வாவின் தந்தையை நேற்றிரவு மர்ம நபர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இலங்கை அணி வீரர் தனஞ்ஜெயா டி சில்வா 26 வயதுடைய இளம் வீரர். இவரது தந்தை ரஞ்சன். அரசியல்வாதியான இவர், ஏற்கனவே ராஜ்யசபா எம்பியாகவும் இருந்துள்ளார். இந்நிலையில் கொழும்புவின் புறநகர்ப் பகுதியான ரத்மலானா பகுதியில் ரஞ்சனை மர்ம நபர்கள் சுட்டு கொலை செய்துள்ளனர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், விசாரணை நடத்தி வருகின்றனர். கிரிக்கெட் வீரரின் தந்தையும் அரசியல்வாதியுமான ரஞ்சனை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சுட்டு கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கலந்துகொள்ள இருந்த தனஞ்ஜெயா டி சில்வா, அவரது தந்தை கொலை செய்யப்பட்டதால், அந்த தொடரிலிருந்து விலகியுள்ளார்.
