பேஸ்புக் நிறுவனத்திற்கு ஆப்பு வைத்த அமெரிக்கா... ரூ. 34,000 கோடி அபராதம் விதித்து அதிரடி..!
தகவல் திருட்டு தொடர்பான புகாரில் பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ. 34,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தகவல் திருட்டு தொடர்பான புகாரில் பேஸ்புக் நிறுவனத்திற்கு ரூ. 34,000 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சமூக இணையதளமான பேஸ்புக்கை உலகம் முழுவதும் 200 கோடி பேர் பயன்படுத்துகின்றனர். இவர்களின் தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் பேஸ்புக் வசம் உள்ளது. பேஸ்புக் நிறுவனத்திடம் பல நிறுவனங்கள் வர்த்தக பங்குதாரர்களாக உள்ளன.
இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனலட்டிகா இது, அரசியல் ஆலோசனை நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டிரம்ப் பிரச்சார குழுவினருக்கு இந்த நிறுவனம்தான் ஆலோசகராக இருந்தது. இந்த நிறுவனம் பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து கோடிக்கணக்கான மக்களின் தனிப்பட்ட தகவல்களை பெற்று, தேர்தல் பிரச்சார வியூகங்கள் வகுத்தது கண்டறிப்பட்டது. இவ்வாறு பேஸ்புக் நிறுவனம் முறைகேடாக நடந்து கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த பேஸ்புக் நிறுவனம், ‘பயனாளர்களின் தகவல்களை கேம்பிரிட்ஜ் நிறுவனம் திருடியது உண்மைதான். இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்’ என கூறியது. இவ்வாறு பேஸ்புக் நிறுவனம் முறைகேடாக நடந்து கொண்டது பற்றி அமெரிக்காவின் ஒழுங்குமுறை அமைப்பான ‘பெடரல் வர்த்தக ஆணையம்’ (எப்டிசி) தனது விசாரணையை கடந்தாண்டு மீண்டும் தொடங்கியது.
அதில், தனிநபர் தகவல்களை பேஸ்புக் நிறுவனம் ஒப்பந்த விதிமுறைகளை மீறி பகிர்ந்து கொண்டது உறுதி செய்யப்பட்டதால், அதற்கு ரூ.34,000 கோடி அபராதம் விதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது. மேலும் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் இவ்வளவு பெரிய அபராத தொகையை செலுத்த இருப்பது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.