திருமண நிகழ்ச்சியின் போது தற்கொலைப்படை தாக்குதல்... 63 பேர் உடல் சிதறி உயிரிழப்பு..!

காபூலில் திருமண நிகழ்ச்சியின் போது தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 180-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Explosion Targets Wedding Hall In Kabul... 63 people Killed

காபூலில் திருமண நிகழ்ச்சியின் போது தற்கொலைப்படையினர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 63 பேர் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 180-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியாக அமெரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரும் அங்கு தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

 Explosion Targets Wedding Hall In Kabul... 63 people Killed

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமணம் நடந்து கொண்டிருந்தது. இந்த திருமண நிகழ்ச்சியில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட விருந்தினர்களாக கலந்துகொண்டனர். விருந்தின்போது இசைக் கச்சேரியும் நடத்தப்பட்டது. அப்போது உடலில் குண்டுகளை அணிந்திருந்த ஒருவர் திடீரென அதை வெடிக்கச் செய்தார்.  Explosion Targets Wedding Hall In Kabul... 63 people Killed

இந்த வெடிகுண்டு தாக்குதலில் விருந்தில் பங்கேற்ற இளைஞர்கள், குழந்தைகள் என சுமார் 60-க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 180-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அங்கு வந்த பாதுகாப்புப் படையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

 Explosion Targets Wedding Hall In Kabul... 63 people Killed

இந்த தற்கொலைபடைத் தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இது தொடர்பாக பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios