இந்தியாவுக்கு எதிராக ஆபாச நடிகை புகைப்படம் வெளியீடு... பாகிஸ்தானின் படுபயங்கர முட்டாள் தனம்..!
காஷ்மீர் போராட்டக்காரர்கள் என புகழ்பெற்ற ஆபாச நடிகை ஜானி ஜின்சின் புகைப்படத்தை இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித் ட்விட் செய்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
காஷ்மீர் போராட்டக்காரர்கள் என புகழ்பெற்ற ஆபாச நடிகை ஜானி ஜின்சின் புகைப்படத்தை இந்தியாவுக்கான பாகிஸ்தான் முன்னாள் தூதர் அப்துல் பாசித் ட்விட் செய்துள்ளது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியதுடன், ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசமாக மாற்றி உத்தரவிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாகிஸ்தான், சர்வதேச நாடுகளின் உதவியை நாடியது. ஆனால், ரஷ்யா உட்பட எந்த நாடும் பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை.
இதனால், விரக்தியடைந்த பாகிஸ்தான், சீனா உதவியுடன் ஐ.நா., பாதுகாப்பு சபையில் முறையிட்டது. ஆனால், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்விவகாரம் என நிரந்தர உறுப்பு நாடுகள் கூறியதை ஐ.நா.,வும் ஏற்று கொண்டன. இதனால், பாகிஸ்தான் பிரதமரும், அமைச்சர்களும் போர் வெறியைத் தூண்டும் விதமாக குமுறி வருகின்றனர்.
அக்டோபர் மாதம் முழுமையான போர் வெடிக்கும் என்றும் 125-150 கிராம் அளவுக்கு சிறிய தந்திரோபாய அணு குண்டுகள் இருப்பதாகவும் பாகிஸ்தான் தலைவர்கள் உணர்ச்சியற்ற மற்றும் ஆத்திரமூட்டும் அறிக்கைகளையும் வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவிற்கான முன்னாள் பாகிஸ்தான் உயர் அதிகாரி அப்துல் பாசித், ஆபாச நட்சத்திரத்தின் புகைப்படத்தை ரி- ட்வீட் செய்து, அவரை காஷ்மீர் எதிர்ப்பாளர் என்று தவறாக ட்விட் செய்து உள்ளார்.
ஆபாச நடிகர் ஜானி சின்ஸ் நடித்த ஆபாச திரைப்படத்தின் புகைப்படத்துடன் மோசமான பதிவை வெளியிட்டுள்ளார். ஆனால், பாசித் தனது ட்வீட்டை உடனடியாக நீக்கி உள்ளார். ஆனால் இது ஸ்க்ரீன் ஷாட் செய்யப்பட்டு நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு விட்டது. இந்தியாவின் முன்னாள் பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் ஆபாச நட்சத்திரம் ஜானி சின்ஸ் படத்தை ரி- ட்விட் செய்துள்ளது அனந்த் நாக் காஷ்மீரைச் சேர்ந்த யூசுப் என்பவரது ட்விட்டை. இவருக்கு கல் வீச்சால் பார்வை போனது குரல் கொடுங்கள் என்று கூறி படத்தை ட்வீட் செய்துள்ளார். பாகிஸ்தான் அதிகாரிகள் இதுபோன்ற முட்டாள்தனங்களில் ஈடுபடுவது இது முதல் முறை அல்ல.