நான் மட்டும் தோற்றுவிட்டால் அமெரிக்காவை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது..!! சீனாவை கழுவி ஊற்றும் ட்ரம்ப்..!!
அதிபர் ட்ரம்ப், பிடனை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் நான் வெற்றி பெறக்கூடாது என சீனா விரும்புகிறது, அதனால் நல்ல பலன் அடைய முடியுமென அந்நாடு நினைக்கிறது
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற வேண்டும் என சீனா விரும்புகிறது. அமெரிக்க ஜனநாயகக் கட்சிக்கும் சீனாவுக்கும் இடையே மென்மையான போக்கு நிலவுகிறது என அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வருகிற நவம்பர் 3ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார், ட்ரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பில் ஜோ பிடன் போட்டியிட உள்ளார். இந்த தேர்தல் குறித்து அரிஸோனா, புளோரிடா, மிக்சிகன், வடக்கு கரோலினா, பென்சில்வேனியா மற்றும் விஸ்கான்சின் ஆகிய மாநிலங்களில் நடந்த கருத்துக் கணிப்புகளில் அதிபர் டிரம்ப் பின் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிபர் தேர்தலில் வெற்றி பெற தேவையான அனைத்து முயற்சிகளையும் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் மக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க இயலும்வரை அதிபர் தேர்தலை தள்ளி வைக்கலாமா என்று டிரம்ப் கூறியுள்ள ஆலோசனை அமெரிக்க மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அதிபர் ட்ரம்பின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்றும், அடுத்த அமெரிக்க அதிபராக ஜோ பிடன் வெற்றிபெற வாய்ப்பு உள்ளது எனவும், கூறப்படுகிறது. இந்நிலையில் எப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்க தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஜோ பிடனுக்கும் ட்ரம்புக்கும் இடையே வார்த்தைப் போர் அதிகரித்துள்ளது. அதிபர் ட்ரம்ப், பிடனை கடுமையாக விமர்சித்துள்ளார். அதாவது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் நான் வெற்றி பெறக்கூடாது என சீனா விரும்புகிறது, அதனால் நல்ல பலன் அடைய முடியுமென அந்நாடு நினைக்கிறது.
தூக்கத்தில் இருக்கும் பிடன் ஜனாதிபதியானால் அது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என சீனா எண்ணுகிறது. ஏனெனில் பிடன் வெற்றி பெற்றால் அது எளிதாக அமெரிக்காவை ஆளமுடியும், பீஜிங் அமெரிக்காவை கட்டுப்படுத்த விரும்புகிறது, எனவே பிடன் ஜனாதிபதியானால் அதை சீனாவால் எளிதில் செய்ய முடியும். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் சீனா மற்றும் ரஷ்யா தலையீடு உள்ளதாக நினைக்கிறீர்களா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், சீனாவுக்கு நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன், அவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நாங்கள் உண்ணிப்பாக கவனித்து வருகிறோம். இணையதளத்தின் வாயிலாக வாக்களிப்பது மிகவும் ஆபத்தானது, ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வட கொரியா ஆகிய நாடுகள் மூலம் சதி நடக்க வாய்ப்புள்ளது என ட்ரம்ப் கூறியுள்ளார்.