Even in midnight sushma will help in twitter - praised by modi

இந்தியாவின் வௌியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சமூக ஊடகங்களை பயன்படுத்தி, தனது துறையை திறம்பட நடத்தி, சிறப்பான சேவை அளிக்கிறார். இரவு 2 மணிக்கு கூட டுவிட்டரில் இந்தியர்களுக்கு உதவுகிறார் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டினார்.

இந்தியர்கள் மத்தியில்

அமெரிக்காவுக்கு 2 நாள் சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு நேற்றுமுன்தினம் வாஷிங்டனில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் விர்ஜினியாவில் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசும் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது-

சுஷ்மாவே உதாரணம்

இன்று சமூக ஊடகங்கள் மிகவும் சக்தி வாய்ந்ததாக மாறி உள்ளன. இதில் நான்கூட இணைந்து இருக்கிறேன். ஆனால், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, ஒரு துறையை எப்படி சிறப்பாக செயல்படுத்தலாம், வலிமைப்படுத்த முடியும் என்பதற்கு, எனது அமைச்சரவையில் வௌியுறவுத்துறை அமைச்சராக இருக்கும், சுஷ்மா சுவராஜ்தான் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.

உடனுக்குடன் உதவி

இந்தியர்கள் உலகில் எந்த நாட்டில் துன்பப்பட்டு, தனது கவலைகளை சுஷ்மாவின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டால், உடனுக்குடன் பதில் அளிப்பதுமட்டுமல்லாமல், செயலில் இறங்கி அவருக்கு உதவி செய்கிறார். நாட்டின் உள்ள ஏழைகளிலும், ஏழை மக்கள் வரை வௌியுறவுத்துறை அமைச்சகம் தொடர்பில் இருக்கிறது.

இந்தியர்களிடன் சுஷ்மா சுவராஜ் மிகவும் மனிதநேயத்துடன் நடந்து கொள்கிறார். சமூக ஊடகங்களை பயன்படுத்தி, தனது துறை மூலம் சிறப்பான சேவையையும், நிர்வாகத்தையும் வழங்கி வருகிறார்.

நள்ளிரவு 2 மணி

உலகில் எந்த மூலையில் ஒரு இந்தியர் கஷ்டத்தில் சிக்கி, நள்ளிரவு 2 மணிக்கு சுஷ்மாவின் டுவிட்டர் பக்கத்தில் குறையை பதிவிட்டால்கூட, அடுத்த 15 நிமிடங்களுக்குள் சுஷ்மா பதில் அளிப்பார். அதன்பின் அரசு சரியான நடவடிக்கையை, துரிதமாக எடுத்து அவர்களை காக்கிறது. இதுதான் சரியன நிர்வாகம்.

80 ஆயிரம் மக்கள்

கடந்த 3 ஆண்டுகளாக வௌியுறவுத்துறை அமைச்சகம் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் துன்பத்தில் சிக்கி இருந்தார்கள். அவர்களை இந்திய அரசும், வௌியுறவுத்துறை அமைச்சமும் பத்திரமாக மீட்டு, தாய்நாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.

இந்தியாவின் மகள் மீட்பு

உதாரணமாக, இந்தியாவைச் சேர்ந்த உஸ்மா அகமது, பாகிஸ்தானில் வலுக்கட்டாயமாக துப்பாக்கி முனையில் திருமணம் செய்யப்பட்டேன் என்று டுவிட்டரில் சுஷ்மாவிடம் தெரிவித்தார். உடனடியாக தலையிட்ட சுஷ்மா , இந்தியத் தூதரகம் மூலம், இந்தியாவின் மகளை நாட்டுக்கு கொண்டு வந்தார். இந்த சாதனைக்கு சுஷ்மாவையே சாரும்

இவ்வாறு அவர் பேசினார்.