Exclusive: Russia Ukraine War: உக்ரைன் மக்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவாக இருக்கும்..சிறப்பு பேட்டி..
ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைன் மக்களுக்கு எப்பொழுதும் ஆதரவாக இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மால்டி காலி ஏசியாநெட் நியூஸிடம் தெரிவித்துள்ளார். ரஷ்ய-உக்ரைன் போரில் நேட்டோவின் தலையீட்டில் ரஷ்யா நேரடியாக ஈடுபடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் ரஷ்யா மீது இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கீவ், கார்கீவ், சுமி உள்ளிட்ட பகுதிகளில் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியை நிறுத்துவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கான அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். விலைகளைக் கட்டுப்படுத்த தன்னால் முடிந்தவரை முயற்சிப்பதாக பைடன் கூறினார். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கும் பிரிட்டன் தடை விதிக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதார தடைகளை கடுமையாக்குவதன் ஒரு பகுதியாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் மற்றும் அது சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதை முற்றாக நீக்குவதாகவும் பிரிட்டன் அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்து வருவதால் இந்தியர்கள் சமையல் எண்ணெய் மற்றும் எரிபொருளை விலை உயர்வு ஏற்படும் என்று தெரிவிக்கபடுகிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருவதால் எரிபொருள் விலை உயரும். மாநிலங்களவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், வரும் நாட்களில் நாடு முழுவதும் எரிபொருள் விலை கிடுகிடுவென உயரும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் ஐரோப்பிய ஒன்றியம் உக்ரைன் மக்களுக்கு எப்பொழுதும் ஆதரவாக இருக்கும் என்று ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மால்டி காலி ஏசியாநெட் நியூஸிடம் தெரிவித்துள்ளார். ரஷ்ய-உக்ரைன் போரில் நேட்டோவின் தலையீட்டில் ரஷ்யா நேரடியாக ஈடுபடக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். உலக நாடுகள் ரஷ்யா மீது இன்னும் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறினார்.மேலும் போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் - ரஷ்யா பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் முடிவு எட்டப்படும் வேண்டும் என்று அவர் தெரிவித்தார். மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் கடுமையாக விதிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: Russia Ukraine War: பதிலடி கொடுத்த அமெரிக்கா..! ரஷ்யாவின் முக்கிய இடத்தில் கை வைத்த பைடன்..ஆடிப்போன புதின்..