ஆயுதங்களை கிள்ளி கொடுக்காமல் அள்ளி கொடுக்கும் ஐரோப்பிய நாடுகள்.. உக்ரைனுக்கு கூடிக்கொண்டே போகும் பலம்.!

கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. உலகநாடுகள் எதிர்ப்பை மீறி எதற்கும் அஞ்சாமல் உக்ரைன் மீது ரஷ்யா உக்ரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

European countries send 70 warplanes to Ukraine

உக்ரைனுக்கு பல்கேரியா, போலந்து, சுலோவாக்கியா ஆகிய 3 நாடுகள் 70 போர் விமானங்களை வழங்க உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரைன் தலைநகர் கீவ் உட்பட பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான சண்டை நடைபெற்று வருகிறது. உலகநாடுகள் எதிர்ப்பை மீறி எதற்கும் அஞ்சாமல் உக்ரைன் மீது ரஷ்யா உக்ரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை உலகநாடுகள் வேடிக்கை பார்ப்பதாக அந்நாட்டு அதிபர் வேதனை தெரிவித்திருந்தார். இதனையடுத்து,  உக்ரைனுக்கு பெரும்பாலான நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. பல்வேறு வகையில் ரஷ்யாவுக்கு கடும் நெருக்கடிகளை ஐரோப்பிய நாடுகள் கொடுத்து வருகின்றனர். பெரும்பாலான நாடுகள் ரஷ்யாவுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது.

European countries send 70 warplanes to Ukraine

இந்நிலையில், ஐரோப்பிய யூனியன் நாடுகளான பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, ருமேனியா, நெதர்லாந்து, டென்மார்க் செக்குடியரசு மற்றும் அமெரிக்கா, கனடா, இஸ்ரேல் ஆகியவை ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அளித்துள்ளன. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் உள்ள 3 நாடுகள் 70 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்க உள்ளன.

European countries send 70 warplanes to Ukraine

பல்கேரியா-30, போலந்து -28, சுலோவாக்கியா-12 ஆகிய 3 நாடுகள் 70 போர் விமானங்களை வழங்க உள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேபோல் உக்ரைனுக்கு அதி நவீன ஆயுதங்களை ஆஸ்திரேலிய அரசு வழங்கியுள்ளது. நாளுக்கு நாள் உக்ரைனின் ஆயுத பலம் கூடிக்கொண்டே போவது ரஷ்ய தரப்பை சற்று பீதியடைய செய்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios