இனிமேல் தான் உக்ரைனின் உக்ரமான ஆட்டமே இருக்கு.. ஐரோப்பிய கூட்டமைப்பு அதிரடி முடிவு.. அதிர்ச்சியில் ரஷ்யா.!

 நாங்கள் ஆயுதங்களைத் தாண்டி, ஃபைட்டர் விமானம் வரை உக்ரைனுக்குக் கொடுத்து உதவப் போகிறோம். ஒரு உக்கிரமான போரை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து விதமான ஆயுதங்களையும் உக்ரைனுக்கு அளிக்கவுள்ளோம் என்றார்.

Europe union to send fighter jets to Ukraine

உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள் மட்டுமின்றி போர் விமானங்களையும் அளிக்க ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. 

உக்ரைன் மீது தாக்குதல் நடந்த அந்நாட்டு அதிபர் புதின் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டார். இதனையடுத்து, 5வது நாட்களாக நடைபெற்று வரும் தாக்குதலில் உக்ரைனில் இதுவரை 300க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், ரஷ்ய தரப்பில் 4000க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாக உறுதிப்பட தகவல் வெளியாகியுள்ளது. தலைநகர் கீவ் உட்பட முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. 

Europe union to send fighter jets to Ukraine

உக்ரைனின் 2-வது மிகப்பெரிய நகரான கார்கிவ்வை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே நேரத்தில் உக்ரைன் அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. அந்த நகரம் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. இன்று 5-வது நாளாக முக்கிய நகரங்களை குறி வைத்து குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகள் மூலமும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பெரும்பாலான கட்டிடங்கள் சேதமடைந்து உக்ரைனுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

Europe union to send fighter jets to Ukraine

இந்நிலையில், உக்ரனின் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவும், ஐரோப்பிய யூனியன் நாடுகளிடம் நாங்கள் இயக்கக் கூடிய சில போர் விமானங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொடுத்து உதவ வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். இதை  ஐரோப்பிய நாடுகள் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இதுதொடர்பாக ஐரோப்பிய ஒன்றிய கொள்கைகள் பிரிவு தலைவர் ஜோசப் போரெல் கூறுகையில்;- நாங்கள் ஆயுதங்களைத் தாண்டி, ஃபைட்டர் விமானம் வரை உக்ரைனுக்குக் கொடுத்து உதவப் போகிறோம். ஒரு உக்கிரமான போரை எதிர்கொள்ளத் தேவையான அனைத்து விதமான ஆயுதங்களையும் உக்ரைனுக்கு அளிக்கவுள்ளோம் என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios