RUSSIA-UKRAINE CRISIS: வான்வழியை பயன்படுத்த ரஷ்யாவுக்கு தடை... எஸ்டோனியா, லாட்வியா உள்ளிட்ட நாடுகள் அதிரடி!!

எஸ்டோனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகள் தங்களது வான்வெளி பகுதியை ரஷ்யா பயன்படுத்த தடை விதித்துள்ளது. 

estonia and latvia ban russia from using their airspace

எஸ்டோனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகள் தங்களது வான்வெளி பகுதியை ரஷ்யா பயன்படுத்த தடை விதித்துள்ளது. உக்ரைன்-ரஷ்யா நாடுகள் இடையே போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் தலைநகர் கிவ் உள்ளிட்ட பல இடங்களில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும் உக்ரைன் நாட்டிலுள்ள சில விமான நிலையங்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. இந்தப் போர் காரணமாக சிவில் விமான போக்குவரத்திற்கு உக்ரைன் நாடு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அங்கு தங்கியுள்ள இந்தியர்களை மீட்க ஏர் இந்தியா விமானம் ரூமேனியா மற்றும் ஹங்கேரி உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்களை அனுப்பியுள்ளது. உக்ரைன் மீது 3வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கில் அந்நாட்டின் படைகள் முன்னேறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

estonia and latvia ban russia from using their airspace

உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் -ஐ ரஷிய படைகள் நெருங்கி வருவதால் போர் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில், நாட்டிற்காக போரிட நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க தயாராக இருக்கிறோம் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி காணொலி காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தலைநகர் கிவ் நமது கட்டுப்பாட்டில் உள்ளது. நகரின் முக்கிய பகுதிகளை நமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளோம். நாட்டிற்காக போரிட நினைப்பவர்களுக்கு ஆயுதம் வழங்க தயாராக இருக்கிறோம். நாம் இந்த போரை நிறுத்த வேண்டும். நாம் அமைதியாக வாழலாம் என்றார்.

estonia and latvia ban russia from using their airspace

இதனிடையே எஸ்டோனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகள் தங்களது வான்வெளி பகுதியை ரஷ்யா பயன்படுத்த தடை விதித்துள்ளது. உக்ரைனில் மூன்றாவது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்த தாக்குதலில் 198 மக்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ரஷ்ய படைகளை பொறுத்தவரையில், உக்ரைன் தலைநகரான கீவ்-வை தாக்கி நெருங்கு வருகிறது. தலைநகரை பிடித்துவிட்டால் மொத்த நாட்டையும் கைப்பற்றிய சூழல் உருவாகும் என தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ரஷ்யாவின் இந்த செயலுக்கு கண்டன்னகள் வலுத்து வரும் நிலையில், எஸ்டோனியா மற்றும் லாட்வியா ஆகிய நாடுகள் தங்களது வான்வெளி பகுதியை ரஷ்யா பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதற்கு முன்னதாக, போலந்து செக் குடியரசு பல்கேரியா ஆகிய நாடுகள் ரஷ்யா விமானங்கள் தங்கள் நாட்டின் வான்வெளி பகுதியை பயன்படுத்த தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios