Asianet News TamilAsianet News Tamil

ஆட்டம் போட்ட அதிபர் ட்ரம்பை ஒரே அடியாக அடித்த செனட் ...!! பதிவியில் இருந்து தூக்கி ஏறிய நடக்கிறது இறுதி விவாதம்...!!

 இதற்கிடையில் ஈரானுடனான  மோதல் அமெரிக்க அதிபரை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கியது .  
 

enquirer going on in american senate against president Donald trump
Author
Delhi, First Published Feb 4, 2020, 12:05 PM IST

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவி நீக்க  தீர்மானத்தின் மீதான இறுதி வாதத்திற்கான விசாரணை நேற்று தொடங்கியது . அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் அவர் மீது இந்த விசாரணை நடைபெற்று வருகிறது. எந்த அமெரிக்க அதிபரும் எடுக்காத அளவிற்கு  எடுத்தேன் கவிழ்த்தேன் என்று முடிவெடுக்கும் மூர்க்கத்தன அதிபர் என்ற பெயரை  ட்ரம்ப் எடுத்து வருகிறார்.  நிதானமில்லாவதர் என சக நாடுகளால்  விமர்சிக்கப்படுபவராகவும் இருந்துவரும் அவர். சொந்த நாட்டு மக்களாலேயே கிண்டல் செய்யப்படும் அளவிற்குதான் அவரது நடவடிக்கைகள் இருந்து வருகிறது என்பதை அனைவரும் அறிவர்.

enquirer going on in american senate against president Donald trump    

அப்படிப்பட்ட அமெரிக்க அதிபர் மேலும் ஒரு பெரிய சிக்கலில் சிக்கியுள்ளார் ,   அதாவது இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் அது தொடர்பாக நாடாளுமன்றத்தை செயல்படுத்த விடாமல் தடுத்ததாகவும்  அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு அது தொடர்பான விசாரணை பிரதிநிதிகள் சபையில்  கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது .   அதில் ட்ரம்பை  பதவி நீக்கம் செய்யவேண்டும் என அவருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டு அது நிறைவேற்றப்பட்டுள்ளது . இதற்கிடையில் ஈரானுடனான  மோதல் அமெரிக்க அதிபரை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாக்கியது . 

 enquirer going on in american senate against president Donald trump

அதிலும் தன் அதிகாரத்தை பயன்படுத்தி போர்தொடுக்க முயற்சி செய்கிறார் என செனட் சபை அவரை கடுமையாக  விமர்சித்தது ,இதனாலேயே அவர்  ஈரானுக்கு எதிராக போர் தொடுப்பதிலிருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது .  ட்ரம்பிற்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தின் மீதான இறுதி வாதத்திற்கான விசாரணை நேற்று தொடங்கியது  இந்நிலையில் அதிபர் தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் அரசியல் கூட்டம் அயோவா மகாணத்தில் நடைபெற  உள்ளது குறிப்பிடத்தக்கது .

Follow Us:
Download App:
  • android
  • ios