அவசர கால சிகிச்சை... புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை பயன்படுத்த அனுமதி..!

அவசரகால சிகிச்சைக்குப் புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த சீனா அரசு அனுமதி அளித்துள்ளது.

Emergency treatment ... Permission to use the newly discovered corona vaccine

அவசர கால சிகிச்சைக்குப் புதிதாக கண்டறியப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்த சீனா அரசு அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸால் உலகமே ஸ்தம்பித்துள்ள நிலையில், கொரோனா வைரஸ் முதலில் கண்டறியப்பட்ட சீனா அதிலிருந்து மீண்டு மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. உலகையே ஆட்டுவிக்கும் கொரோனாவுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பில் உலக நாடுகள் அனைத்தும் பல்வேறு கட்டங்களில் உள்ள நிலையில் அவசர பயன்பாட்டுக்கான தடுப்பூசி பரிசோதனையை சீனா கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது.Emergency treatment ... Permission to use the newly discovered corona vaccine

உள்ளூர் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு லேசான பக்க விளைவுகள் காணப்பட்டதாகவும், இருந்த போதிலும் காய்ச்சல் போன்ற குறிப்பிடத்தக்க பக்கவிளைவுகள் எதுவும் தென்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவசர கால சிகிச்சைக்கு இந்த தடுப்பூசியை பயன்படுத்திக் கொள்ள சீனா அனுமதி அளித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios