ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது. 

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது. மனிதர்களை விண்வெளிக்கும் அனுப்ப வேண்டும் என்ற நோக்கத்தில் எலான் மஸ்க் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தை தொடங்கினார். இதை அடுத்து மனிதர்களை ராக்கெட்டில் நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு அழைத்துச் செல்லுவதற்காக ஸ்டார்ஷிப் ராக்கெட் உருவாக்கப்பட்டது.

இதையும் படிங்க: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று.. 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அரிய நிகழ்வு.. அப்படி என்ன ஸ்பெஷல்..

Scroll to load tweet…

மேலும் இது உலகின் மிகப் பெரிய ராக்கெட்டாக கருதப்படுகிறது. இந்த ராக்கெட்டின் முதல் சோதனை ஓட்டம் இன்று நடைபெற்றது. டெக்ஸாலில் போகாசிகாவில் உள்ள டெக்சாஸின் போகா சிகாவில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளித் தளமான ஸ்டார்பேஸில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

இதையும் படிங்க: பிரிட்டன் பள்ளிகளில் இந்து வெறுப்பு அதிகரிப்பு: ஹென்றி ஜாக்சன் சொசைட்டி ஆய்வில் தகவல்

Scroll to load tweet…

கிளம்பிய சில நிமிடங்களிலேயே இந்த ராக்கெட் நடு வானில் வெடித்து சிதறியது. இதுக்குறித்து விளக்கம் அளித்துள்ள ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம், விண்ணில் செலுத்தப்பட்ட ஸ்டார்ஷிப் ராக்கெட் Rapid unscheduled disassembly காரணமாக ஸ்டேஜ் செப்பரேஷனுக்கு முன்பாக வெடித்ததாக தெரிவித்துள்ளது. இதற்கான காரணம் குறித்து தொழில்நுட்ப குழு ஆராய்ச்சி செய்யும் என்றும் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Scroll to load tweet…