பிரிட்டன் பள்ளிகளில் இந்து வெறுப்பு அதிகரிப்பு: ஹென்றி ஜாக்சன் சொசைட்டி ஆய்வில் தகவல்
லண்டனைச் சேர்ந்த ஹென்றி ஜாக்சன் சொசைட்டி நடத்திய ஆய்வில் பிரிட்டனில் உள்ள பள்ளிகளில் இந்து வெறுப்பு குறித்த புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன.
லண்டனைச் சேர்ந்த ஹென்றி ஜாக்சன் சொசைட்டி நடத்திய இந்து வெறுப்பு குறித்த ஆய்வில், 51 சதவீத இந்துக் குழந்தைகளின் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் பள்ளிகளில் இந்து விரோத வெறுப்பை அனுபவித்ததாக தெரிவித்துள்ளனர். இந்திய மாணவர்களைக் கொண்ட பள்ளிகளில் 1 சதவீதத்திற்கும் அதிகமானவற்றில் கடந்த ஐந்தாண்டுகளில் இந்துக்களுக்கு எதிரான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
19 சதவீத இந்து பெற்றோர்கள் பள்ளிகளில் இந்து வெறுப்பை அடையாளம் காண முடிவதாக நம்புகின்றனர். 15 சதவீத இந்துப் பெற்றோர்கள் பள்ளிகள் இந்துக்களுக்கு எதிரான சம்பவங்களை போதுமான அளவில் கையாளுவதாவும் கருதுகின்றனர். இந்து மாணவர்களை இஸ்லாம் மதத்திற்கு மாற்றும்படி கொடுமைப்படுத்துவது மற்றும் அவர்கள் மீது மாட்டிறைச்சி வீசப்படுவது போன்ற சம்பவங்கள் இந்த அறிக்கையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மெட்டாவில் மீண்டும் ஆட்குறைப்பு! பேஸ்புக், இன்ஸ்டா, வாட்ஸ்அப் ஊழியர்கள் கவலை
பிரட்டனைச் சேர்ந்த ஹென்றி ஜாக்சன் சொசைட்டி லண்டனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டிரான்ஸ்-அட்லாண்டிக் வெளியுறவுக் கொள்கை மற்றும் தேசிய பாதுகாப்புக்கான ஆலோசனைகள் வழங்கும் நிறுவனம் ஆகும்.
"இந்த அறிக்கை ஒரு முக்கியமான பிரச்சினையில் வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. எந்த மத நம்பிக்கையைக் கொண்டிருந்தாலும், குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல பயப்படும் நிலையை ஏற்றுக்கொள்ள முடியாது" என்று ஆய்வறிக்கையின் வெளியீட்டு நிகழ்வின் பேசிய பரோனஸ் சந்தீப் வர்மா கூறியுள்ளார்.
வகுப்பறையில் காட்டப்பட்ட சில பாகுபாடுகள், இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே லெய்செஸ்டரில் ஏற்பட்ட அமைதியின்மையைப் போன்ற வெறுப்பின் வெளிப்பாட்டைக் காட்டுவதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது. இந்துக்களின் சைவ உணவுப் பழக்கத்தைக் கேலி செய்தல், அவர்களின் தெய்வங்களை இழிவுபடுத்துதல் போன்ற பல இழிவான செயல்கள் பற்றிய குறிப்புகள் இந்த அறிக்கையில் உள்ளன.
உலக மக்கள் தொகையில் சீனாவை முந்திய இந்தியா.. அடேங்கப்பா! எவ்வளவு தெரியுமா?
Henry Jackson Society Report on Anti-Hindu Hate In Schools