Elon musk break up: மூன்றாவது மனைவியையும் பிரிந்தார் எலன் மஸ்க்..! காதல் முறிவை அறிவித்தார் மனைவி கிரிம்ஸ்..
Elon musk break up: அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்.
அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின், தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க்.
கடந்த கால உறவு:
இவருக்கு தனது முதல் மனைவியான, ஜஸ்டின் மஸ்க் (எழுத்தாளர்), என்பவருடன் ஐந்து மகன்கள் இருக்கிறார்கள். இதையடுத்து, எலோன் மஸ்க் பிரிட்டிஷ் நடிகை தலுலா ரிலேயுடன் காதல் வசப்பட்டு, இரண்டு முறை திருமணம் செய்து விவாகரத்து செய்தார்.
மேலும் படிக்க...Barack Obama : அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று
உலக கோடீஸ்வரில் ஒருவராக திகழும், எலன் மஸ்கின் நிகர சொத்து மதிப்பு $233 பில்லியன் என்று சொல்லப்படுகிறது.
கிரிம்ஸுடன் எலோன் மஸ்க் பிரேக்கப்:
இதையடுத்து, பாடகி கிரிம்ஸுடன் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாகச் சேர்ந்து வாழ்ந்த எலோன் மஸ்க், செப்டம்பர் 2021 இல் பிரிந்தார். கிரிம்ஸுடன் மஸ் ஆகிய இருவருக்கும் வாடகை தாயின் மூலம் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
இருப்பினும், பிரிவிலும் இருவரும் சுமுகமான உறவில் இருந்த வந்த நிலையில், கடந்த வாரம் வியாழன் அன்று கிரிம் தனது ட்விட்டர் பக்கத்தில், எலோன் மஸ்க்குடனான தனது உறவை முழுவதுமாக முறித்து கொண்டதாக அறிவித்துள்ளார்.
மேலும், எலோன் மஸ்க்கிற்கு 27 வயது ஆஸ்திரேலிய நடிகை நடாஷா பாசெட்வுடன் சமீபத்தில், உறவு இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இரண்டு மாதங்களாக இருவரும் டேட்டிங் செய்தாகவும், ஒன்றாக அதிக நேரத்தை செலவிடுவதாகவும் சொல்லப்படுகிறது எனப்து குறிப்பிடத்தக்கது.