Barack Obama : அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று
2019-ம் ஆண்டு சீனாவில் இருந்துதான் கொரோனா எனும் வைரஸ் பரவியது. கடந்த 3 ஆண்டுகளாக உலகை ஆட்டி படைத்து வருகிறது கொடிய கொரோனா வைரஸ்.
மீண்டும் கொரோனா வைரஸ் :
உலக நாடுகள் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க லாக்டவுன் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. தற்போதைய நிலையில் உலகின் பல பகுதிகளில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.இந்நிலையில் கொரோனா வைரஸ் சீனாவில் மீண்டும் அதி வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் ஏற்கனவே பல்வேறு உருமாற்றம் அடைந்த நிலையில் சீனாவில் தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் என்ன வகை என்பது தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் சீனாவின் பல மாகாணங்களும் கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் லாக்டவுனை முழு வீச்சில் அமல்படுத்தி இருக்கின்றன. இதனால் உலகின் பிற பகுதிகளுக்கும் சீனாவின் புதிய கொரோனா வைரஸ் பரவுமோ என்கிற அச்சத்தை உருவாக்கி இருக்கிறது.
ஒபாமாவுக்கு பாதிப்பு :
இந்நிலையில் அமெரிக்கா முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் எனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தொண்டையில் வலி இருந்தது. இருந்தாலும் நலமாகவே உள்ளேன். நானும் எனது மனைவியுமான மிச்செல் இருவரும் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக்கொண்டோம்.
அவருக்கு கொரோனா தொற்று இல்லை என தெரிய வந்தது. தொற்றுகள் குறைந்தாலும் கூட நீங்கள் தடுப்பூசி எடுத்துக்கொள்ளவில்லை என்றால் விரைவில் தடுப்பூசி எடுத்துகொள்ளுங்கள்' என பதிவிட்டுள்ளார் ஒபாமா.