கட்டழகால் கவர்ந்த உலக புகழ் எலிசபெத் டெய்லரின் கார் ஏலம்.. விலையை கேட்டா அசந்துடுவீங்க...!
ஹாலிவுட் நடிகை எலிசபெத் பயன்படுத்திய கார் ஏலம் விடப்படுகிறது. 24 கோடி ரூபாய்க்கு மேல் இது விலைபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாலிவுட் நடிகை எலிசபெத் பயன்படுத்திய கார் ஏலம் விடப்படுகிறது. 24 கோடி ரூபாய்க்கு மேல் இது விலைபோகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை தனது கட்டழகால் கவர்ந்தவர் ஹாலிவுட் நடிகை எலிசபெத் டெய்லர். லிஸ் டெய்லர் என அழைக்கப்படும் இவர், ஆங்கிலோ- அமெரிக்க நடிகை. அமெரிக்க திரைப்பட துறையில் தலைசிறந்த பெண்கள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளார். 1961-ம் ஆண்டு எலிசெபத் டெய்லர் பயன்படுத்திய ரோல்ஸ் ராய்ஸ் கார் வரும் ஆகஸ்ட் மாதம் 6-ம் தேதி அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஏலம் விடப்படவுள்ளது.
இந்த கார், ‘கிரீன் காடஸ்' (பச்சை தேவதை) என்று செல்லமாக அழைக்கப்படுகிறது. 20 ஆண்டு காலம் இந்த காரை பயன்படுத்தி உள்ளார் எலிசெபத். இதன் ஆரம்ப கட்ட விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. என்றாலும் 24 கோடி ரூபாய்க்கு மேல் இது விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தற்போதைய நிலையில் காரின் விலையை விட 5 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.