ஷாப்பிங் மாலில் சரமாரி துப்பாக்கிச்சூடு... 20 பேர் உயிரிழப்பு... 40 பேர் படுகாயம்..!

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

El Paso Walmart shopping center shooting...killing 20 people

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 20 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

1997-ஆம் ஆண்டு முதல் அமெரிக்காவின் பாதுகாப்பான 3 நகரங்களில் ஒன்றாக பாஸோ கருதப்பட்டது. இந்நிலையில், டெக்சாஸ் மாகாணத்தில் எல் பாஸோ என்ற இடத்தில் வால்மார்ட் எனப்படும் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தில் புகுந்த மர்ம நபர்கள் திடீரென கண்ணில் பட்டவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். அங்கிருந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இந்த தாக்குதலில் 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. El Paso Walmart shopping center shooting...killing 20 people

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டெக்ஸாஸ் பகுதியைச் சேர்ந்த பேட்ரிக் க்ரூசியஸ் என்ற இளைஞரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 4 பேர் வரை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வால்மார்ட்டில் இருந்தவர்கள் போலீசாரிடம் தகவல் அளித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த ஷாப்பிங் மாலை சுற்றிலும் போலீசார் தங்களது கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். El Paso Walmart shopping center shooting...killing 20 people

வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இன்றைய துப்பாக்கிச்சூட்டால் டெக்ஸாசில் மக்களுக்கு மட்டும் துயரத்தை தரவில்லை. நாங்களும் இந்த துயருடன் இணைந்து பங்கேற்கிறோம். துப்பாக்கிச்சூடு ஒரு கோழைத்தனம். அப்பாவி மக்களை கொல்வதற்கு எந்த காரணம் கூறினாலும் ஏற்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார். El Paso Walmart shopping center shooting...killing 20 people

கடந்த வாரம் கலிஃபோர்னியாவில் உணவுத்திருவிழாவின் போது சாண்டினோ வில்லியம் லீகன் என்ற 19 வயது இளைஞர் நடந்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர், 13 பேர் காயமடைந்தனர். பின்னர் அந்த இளைஞன் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டான். கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios