Asianet News TamilAsianet News Tamil

கியூபா மீதான பொருளாதார தடைகள் விலகுகிறது? : 54 ஆண்டுகளில் முதல்முறையாக அமெரிக்கா எதிர்த்து வாக்களிக்கவில்லை

economy ban-removed-on-cuba
Author
First Published Oct 28, 2016, 7:16 AM IST


கியூபா நாட்டுக்கு எதிரான பொருளாதார தடையை விலக்கிக் கொள்வது தொடர்பாக ஐ.நா. அவையில் 25-வது முறையாகக் கொண்டு வரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்காவும், இஸ்ரேலும் இந்தமுறை வாக்களிக்கவில்லை.

கடந்த 54 ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக அமெரிக்கா இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக 193 உறுப்பினர்கள் கொண்ட ஐ.நா. அவையில் 191 உறுப்பினர்கள் இந்த தீர்மானத்துக்கு ஆதரவாகவும், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் நடுநிலையும் வகித்தன.

இது குறித்து ஐ.நா.வுக்கான அமெரிக்கத் தூதர் சமந்தா பவர் அவையில் பேசுகையில், “ கியூபாவுக்கு எதிராக பொருளாதாரத் தடையை விலக்கிக்கொள்ளும் தீர்மானத்துக்கு எதிராக அமெரிக்கா எப்போதும் எதிராக வாக்களித்து வந்தது. ஆனால், இந்த முறை அந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்காமல், நடுநிலை வகிக்கிறது'' எனத் தெரிவித்தார்.

economy ban-removed-on-cuba

கடந்த 54 ஆண்டுகளுக்கும் மேலாக தென் அமெரிக்க நாடான கியூபாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தூதரக, வர்த்தக உறவுகள் இன்றி பனிப்போர் நிலவியது. இந்த சூழ்நிலையில், அரை நூற்றாண்டுகளுக்குப் பின், கடந்த மார்ச் மாதம் அதிபர் ஒபாமா கியூபாருக்கு சென்றார். இவரின் வருகைக்குபின், ஜூலை மாதம் இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவுகள் துளிர்த்தது.

ஐ.நா. அவையில் கியூபாவுக்கு ஆதரவாக இந்த தீர்மானம் நிறைவேறிய போதிலும், கியூபாவுடனான முழுமையான வர்த்தக மற்றும் நிதிதொடர்பான உறவுகள் தொடங்க அமெரிக்காவுக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறுவது அவசியமாகும்.  முதலில், கியூபாவில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என குடியரசுக் கட்சிகளின் பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே இந்த தீர்மானம் குறித்து கியூயா வெளியுறவுத்துறை அமைச்சர் புருனோ ரோட்ரிக்ஸ் கூறுகையில், “ ஐ.நா.அவையில் நிறைவேறிய தீர்மானத்தையும், அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றியதையும் நாங்கள் வரவேற்கிறோம். இந்த தீர்மானத்தைத் தொடர்ந்து, அமெரிக்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அதேசமயம், கியூபா ஆண்கள், பெண்களுக்கு எதிராக அப்பட்டமாக இழைக்கப்பட்ட மனித உரிமைகள் மீது எங்கள் முற்றுகை தொடரும். இதை இன அழிப்பு என்பதற்கு தகுதியானது.

கடந்த 60 ஆண்டுகளாக கியூபா மீது விதிக்கப்பட்ட இன அழிப்பு கொள்கையால், ரூ.50 லட்சத்து 394 ஆயிரத்து 77 லட்சம் கோடி(75 ஆயிரத்து369 கோடி டாலர்) இழப்பு ஏற்பட்டுள்ளது.  இந்த தடையால், கியூபாவில் உள்ள எந்த ஒரு குடும்பமும், துறையும் பாதிக்கப்படவில்லை.

இந்த தடையால் முக்கியமாக கியூபா மக்களுக்கு பார்கின்சன்(மூளைநோய்) நோய்க்கு தேவையான மருத்துவ கருவிகள், மருந்துகள் கிடைக்காமல் போனது. உள்நாட்டிலும் அந்த மருந்துகளை தயாரிக்க முடியாலும் தடைவிதிக்கப்பட்டது.

இந்த தீர்மானத்தை நாங்கள் வரவேற்றபோதிலும், இது எந்த அளவு நடைமுறைப்படுத்தப்படும் என்பதில் குறைந்த நம்பிக்கையே இருக்கிறது'' எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios