கவுதமாலா நாட்டில் பயணிகள் பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 20 பயணிகள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தனர். 

கவுதமாலா நாட்டில் வடகிழக்கு பீட்டன் பகுதியில் இருந்து தலைநகர் நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில், கவுலான் என்ற இடத்தில் வளைவில் பேருந்து திரும்பிய போது பின்புறம் வேகமாக வந்த லாரி ஒன்று பயங்கரமாக மோதியது. 

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தில் 20 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 9 பேரும் அடங்குவர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக மீட்டு படையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்டுக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.