Asianet News TamilAsianet News Tamil

Earthquake : அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நிலநடுக்கம்.. நியூயார்க் நகரிலும் உணரப்பட்டது - பீதியில் மக்கள்!

Earthquake : அமெரிக்காவின் புவியியல் ஆய்வு நிலையம் அளித்த தகவலின்படி, நியூயார்க் நகரத்தில் இன்று வெள்ளிக்கிழமை 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Earthquake of  5 5 hit new jersey and tremors felt in some parts of new york city ans
Author
First Published Apr 5, 2024, 8:48 PM IST

நியூஜெர்சியில் உள்ள வைட்ஹவுஸ் நிலையத்திற்கு வடகிழக்கே 4.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காஸாவின் நியூயோர்க் தலைமையகத்தில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இந்த நிலநடுக்கம் காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

புரூக்ளினில் கட்டிடங்கள் குலுங்கின, அலமாரி கதவுகள் மற்றும் சாதனங்கள் கடுமையாக குலுங்கியுள்ளன. இன்று வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி 10:20 மணியளவில் (15:20 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் இதுவரை இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டதாக தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

பூமிக்கு அடியில் 700 கி.மீ. ஆழத்தில் ஒரு ரகசியப் பெருங்கடல்! அதிசயிக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!

பிலடெல்பியாவில் இருந்து நியூயார்க் வரை மற்றும் கிழக்கு நோக்கி கடற்கரையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக சமூக ஊடக பயனர்கள் தெரிவித்தனர். நேற்று ஏப்ரல் 4ம் தேதி தாய்வான் நாட்டில் சுமார் 7.2 ரெக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய நிலநடுக்கமாக இது இருந்தது.

இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் இன்று காலை வெளியானது. கிழக்கு தாய்வானின், ஹாலியன் என்ற நகருக்கு அருகே, சுமார் 18 கிலோமீட்டர் தூரத்தில் நேற்று ஏப்ரல் 4ம் தேதி இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தாய்வான் என்பது "ரிங் ஆப் ஃபயர்" என்று அழைக்கப்படும் உலகில் 90 சதவீதமான நிலநடுக்கங்கள் ஏற்படும் இடங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகின்றது.

தைவான் நிலநடுக்கத்தில் காணாமல் போன 2 இந்தியர்கள்.. எப்படி இருக்கிறார்கள்? வெளியான தகவல்!

Follow Us:
Download App:
  • android
  • ios