இந்தோனேசியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.

இந்தோனேசியாவின் சுமத்திரா தீவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 6.5 ஆக பதிவாகி உள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக சேதம் குறித்த தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை. 

சுமத்திரா தீவில், பெங்காலு நகரில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தொலைவில் 67 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.