இந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் இன்று  மாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவுக்கொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டதும் கட்டிடங்கள் குலுங்கியது, பொதுமக்கள் வெளியே ஓடிவந்தனர். அங்க பதட்டமான நிலை ஏற்பட்டது.

அதிகமான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை அடுத்து அங்கு தொடர்ச்சியாக நிலஅதிர்வுகளும் ஏற்பட்டது.

முதல்கட்டமாக நேரிட்ட நிலநடுக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 9 கிராமங்கள் பாதிக்கப்பட்டது, அங்கிருந்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. தாங்கலாவில் பெரும்பாலான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளது.

இந்நிலையில் இந்தோனேஷியா நகரை சுனாமி அலைகள் தாக்கியுள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலு நகரை சுனாமி அலைகள் தாக்கியுள்ளதையடுத்து அங்கு பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது.