அந்தமான் தீவில் நிலநடுக்கம்..! ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவு..!
அந்தமான் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதால் மக்கள் பெரும் பதற்றம் அடைந்து உள்ளனர். ரிக்டர் அளவு கோலில் 5 ஆக பதிவாகி உள்ளது.
அந்தமான் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளதால் மக்கள் பெரும் பதற்றம் அடைந்து உள்ளனர். ரிக்டர் அளவு கோலில் 5 ஆக பதிவாகி உள்ளது.
அந்தமான் தீவில் திடீரென தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுகள் அதிர்ந்தன, வீட்டில் உள்ள பொருட்கள் பல கீழே விழுந்து உடைந்துள்ளது. நிலநடுக்கத்தை மக்கள் உணர்ந்ததால் வீடுகளை விற்று வெளியே ஓடி வந்து பயத்தில் உள்ளனர்.
இதற்கு முன்னதாக இந்தோனேசியாவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, அங்கு சுனாமி பெருமளவு ஏற்பட்டு இதுவரை 1200-கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நிலைமையை அங்கு சமாளிக்க முடியாமல் தவிக்கும் இந்த நேரத்தில் அந்தமான் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிக்டர் அளவுகோலில் 5 ஆக பதிவாகி உள்ள இந்த நிலநடுக்கத்தால் வேறு எந்தெந்த பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளது என்பது குறித்த முழு விவரம் இன்னும் வெளியாக வில்லை.