”விபசாரம் செய்வது எப்படி?” பல்கலைக்கழக பட்டயப்படிப்பு!! இளைஞர்களிடம் பெருகும் ஆர்வம்...

’பாலியல் தொழிலில் ஈடுபடுவது எப்படி?’ என்ற தங்கள் பட்டயப் படிப்பிற்கு மாணவர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு இருப்பதாகவும், இத்தனை மாணவர்கள் பாலியல் படிப்பில் சேர்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் கூறுகிறது.

Durham University course on How to be a prostitute

விவசாயம், மீன் பிடிப்பு போன்றவை உலகின் பழமையான தொழில்கள் என்றால் மது விற்பது, விபசாரம் ஆகியவை உலகின் பழமையான தீய தொழில்களாக கருதப்பட்டன. ஆனால், கால மாற்றம், கலாசார மாற்றம் போன்றவற்றால் மது குடிப்பதும், பாலியல் தொழிலும் தீயவை என்ற கண்ணோட்டம் இன்றைய இளைஞர்கள் மத்தியில் மாறி வருகிறது. குறிப்பாக விபசாரத்தை பல நாடுகள் சட்டப்பூர்வமாக்கியுள்ளன. ஆனால் பல இளைஞர்களை, இளம் பெண்களை சீரழிக்கும் பாலியல் தொழிலை எதிர்க்கும் இங்கிலாந்தில் அதிர்ச்சியான விஷயன் ஒன்று நடந்துள்ளது.

Durham University course on How to be a prostitute துர்ஹாம் பல்கலைக்கழகம்

 

இங்கிலாந்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் மிக முக்கியமான பல்கலைக்கழகம் துர்ஹாம் பல்கலைக்கழகம். 200 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கிலாந்து அரச குடும்பத்தால் துவக்கப்பட்டது இது. இந்த பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் பலரும் சமீப காலமாக பணத்திற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் பாலியல் தொழிலில் ஈடுபடுவது அதிகமாகியுள்ளது. அதேபோல யூடியூப் போன்ற சமூக வலைதளங்களில் பாலியல் உணர்வுகளைத் தூண்டக்கூடிய பல வீடியோக்களை உருவாக்கி பிரபலமாவதும் இந்த பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படி செய்யும் பல மாணவ மாணவிகளும் பாதிக்கப்படக்கூடாது என்ற நல்ல எண்ணம் அந்த துர்ஹாம் பல்கலைக்கழக மாணவர் சங்கத்துக்கு வந்துள்ளது. உடனே களத்தில் குதித்து, “எந்த சிக்கலிலும் சிக்காமல், எந்த உடல்நலக் கோளாறும் ஏற்படாமல், பாதுகாப்பாக பாலியல் தொழிலை எப்படி செய்வது?” என்று ஒரு ஆன்லைன் வகுப்பையே தொடங்கிவிட்டார்கள். கொடுமை என்னவென்றால் இதற்கு பல்கலைக்கழக நிர்வாகமும் ஒப்புதல் தந்துவிட்டது.

Durham University course on How to be a prostitute விபசாரம் படிக்க பல்கலைக்கழக விளம்பரம்

 

பாலியல் தொழில் செய்யும் போது என்னென்னெ பிரச்சனைகள் உடல் ரீதியிலும், வாழ்விலும் வரலாம், அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று இந்த வகுப்பில் விபசாரம் செய்ய விரும்பும் மாணவர்களுக்கு போதிக்கப்படுகிறது. லெவல் 1, லெவல் 2 என வீடியோ கேம் விளையாடுவது போல இவர்கள் விளையாட்டாக பல்கலைக்கழகத்துக்கு படிக்க வரும் மாணவர்களுக்கு விபசாரம் சொல்லித்தருகின்றனர் என்று பல முனைகளில் இருந்தும் எதிர்ப்புக் குரல் எழத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, இங்கிலாந்து அரசின் பல்கலைக்கழகங்களுக்கான அமைச்சர் மைக்கெலி டானிலன் இந்த ஆன்லைன் வகுப்பு ஏற்பாட்டை வன்மையாக கண்டித்துள்ளார். மாணவர்களை பாதுகாப்பது பல்கலைக்கழகத்தின் முக்கிய கடமை என்றும், இப்படி பயங்கரமான பாலியல் தொழிலுக்கு மாணவர்களை ஊக்குவிப்பதன் மூலம் துர்ஹம் பல்கலைக்கழகம் கடமை தவறுகிறது என்றும் அமைச்சர் டானிலன் கூறியுள்ளார்.

Durham University course on How to be a prostitute

இது பற்றி அங்கிருக்கும் மாணவர்கள் பலரும் ஆட்சேபங்களை தெரிவித்துள்ளனர். இப்படி ஒரு வகுப்பு, துர்ஹம் பல்கலைக்கழக வளாகத்தில் விபசாரம் சாதாரணமாக நடக்கிறது என்ற பிம்பத்தையே கொடுக்கும் என்றும், தங்கள் எதிர்காலத்துக்கு அது நல்லதல்ல என்றும் மாணவர்கள் பலரும் கருதுகின்றனர். ஆனால், பாலியல் தொழிலில் சேர்வது குறித்த ஆர்வம் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே வருகிறது என்றும், அவர்களுக்கு பாதுகாப்பை சொல்லிக்குடுப்பது அவசியம் என்றும் பல்கலைக்கழகம் கூறுகிறது. விபசார ஆன்லைன் வகுப்பிற்கான விளம்பரங்களை மாணவர் சங்கம் அனைத்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios